Sunday, July 8, 2012

ஜாதியை மறுக்கிறேன் ஜாதியை விட்டுவிட்டேன் என்பதெல்லாம் ஆதிக்க ஜாதிகளுக்கு பயனை கொடுக்கலாம். அது தலித் மக்களுக்கு ஒரு பயனையும் தராது. முக்கியமாக அருந்ததிய மக்களுக்கு அது பயனற்றது. தலித் மக்கள் முக்கியமாக அருந்ததிய மக்கள் தங்களது சமூக உரிமைகளுக்காக ஒருங்கிணைய வேண்டியது போராட வேண்டியது பாடுபட வேண்டியது அவசியம். அந்த சமூகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஜாதியை விட்டுவிட்டேன் என்று திரவிடத்திற்கும், தமிழியதுக்கும், இந்துத்துவதுக்கும், ராமசாமியிசத்துக்கும், மார்க்சியதுக்கும் தூக்கு தூக்கி வேலை செய்ய போய்விட்டால்.  அந்த சமூக மக்களின் உரிமைகளுக்கு யார் போராடுவார்கள்? ஜாதியை மறுக்கனும் ஜாதியை விடனும் என்பதெல்லாம் தலித் மக்களை ஏமாற்ற ஆண்ட பரம்பரைகள் சூத்திர கூட்டம் கொண்டுவந்த திராவிட தமிழ் அரசியல். ஏமாந்தது போதும் சமூக அடையாளத்தை கையில் எடுப்போம் இழந்த உரிமைகளை மீட்போம். ///// ‘பறையர்’ இனத்தாருக்கு ‘பறையன்’ என்பவன் ‘நான் தான்’ என்று முன் வந்தாலொழிய அவன் சுதந்திரம் பாராட்ட முடியாமல் தாழ்த்தப்பட்டு என்றும் தரித்திரனாய் இருப்பான்."  - தாத்தா திவான்பகதூர் இரட்டைமலை சீனிவாசன் //////

No comments: