Friday, July 6, 2012

இட ஒதுக்கீடு என்பது பிச்சை அல்ல உரிமை

பெ அ தேவன் : இவ்வாறு கற்பிக்கப்பட்டுள்ளது. கட்டைகள் இல்லாமல் நடக்க முடியாது என்பது போல. இது தலித்களுக்கு பின்னடைவையே ஏற்படுத்தும்.

சாக்கிய முனி: இட ஒதுக்கீடு என்பது பிச்சை அல்ல அது உரிமை என்பதை இட ஒதுக்கீடு பற்றிய வரலாற்றை ஆராய்ந்தவர்களுக்கு தெரியும். இந்தியாவில் முதன் முதலில் இட ஒதுக்கீட்டை  கேட்டவர்கள் பார்ப்பனர்களும் ஆதிக்க (சூத்திர) ஜாதியினரும். இந்தியாவில் முதன் முதலில் இட ஒதுக்கீட்டை அனுபவித்தவர்கள்  பார்ப்பனர்களும் ஆதிக்க (சூத்திர) ஜாதியினரும்.   பிரிட்டிஷார் காலத்தில் அனைத்து உயர் பதவிகளும் பிரிட்டிஷார்  வசம் இருந்தது. அரசு உயர் பதவிகளுக்கு நடக்கும் தேர்வுகள்  இலண்டனில் நடந்தது. அப்போது இந்தியர்களுக்கு/ திராவிடர்களுக்கு / தமிழர்களுக்கு உயர் பதவிகள் இல்லை எனவே அவர்கள் உயர் பதவி வகிக்க வகை செய்ய வேண்டும் என கோரப்பட்டது.  இந்தயாவில்  பிரிட்டிஷார்க்கு  சமமாக தகுதி உள்ளவர்கள் இல்லை என அவர்கள் கோரிக்கை பிரிட்டிஷ் அரசாங்கத்தால் மறுக்கப்பட்டது. அதை எதிர்த்து போராடி பார்ப்பன மற்றும் ஆதிக்க ஜாதி  இந்தியர்கள் / திராவிடர்கள் / தமிழர்கள்   உயர்பதவிகளில்  இட ஒதுக்கீடு கேட்டு பெற்றனர். பிரிட்டிஷார் ஆதிக்க ஜாதிகளுக்கு சொன்னதை இந்தியர்கள் (திராவிடர்கள்/தமிழர்கள்) தலித்துக்களுக்கு சொன்னார்கள். பிரிட்டிஷார் கிட்ட இருந்து உயர் பதவிகளை இந்தியர்கள் (திராவிடர்கள் தமிழர்கள்) பெற்று அதை சாக்கிய  (தலித்) மக்களுக்கு மறுத்த போது அதை  தலித் இயக்கங்கள் எதிர்த்து போராடி தங்கள் பங்கை பிரிட்டிஷார் இடம் இருந்து பெற்றனர். இட ஒதுக்கீடு என்பது நாங்கள் முடமாக இருப்பதால், நாங்கள் தகுதி அற்று இருப்பதால், நலிவுற்று இருப்பதால், ஒடுக்கப்பட்டு இருப்பதால் கொடுக்கப்பட்டது என்பது ஆதிக்க ஜாதிகளின் (இந்தியர்கள்/திராவிடர்கள்/தமிழர்கள்)  பிரச்சாரம். அதை ஏற்று சில  கூமுட்டைகள் நாங்கள் தாழ்ந்தவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என பிச்சை எடுத்துக்கொண்டு இருக்கின்றனர். இது பிச்சை அல்ல உரிமை. சம பங்கீடு. British Prime Minister Ramsay Macdonald அவர்கள் communal award கொண்டு வந்தார். இந்து இசுலாமிய சமூகங்களுக்கு சமமாக சாக்கிய (தலித்) மக்களுக்கு பங்கீடு வழங்க வேண்டும் என்பதே அந்த communal award. அது முழுமையாக நடை முறைக்கு கொண்டு வரப்படவில்லை. இட ஒதுக்கீடு பிச்சை  அல்ல உரிமை. எல்லா தகுதிகளும் இருந்தும் எங்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுவதை எதிர்த்து போராடி பெற்ற உரிமை. இந்த உரிமையை நெஞ்சை நிமிர்த்தி அனுபவிப்பதை விட்டு விட்டு சில கூ முட்டைகள் கூனி குறுகி அனுபவித்து விட்டு பட்டமும் பதவியும் வந்த பிறகு நான் பறையன் அல்ல சாக்கியன் (தலித்) அல்ல நான் திராவிடன் நான் தமிழன் நான் பொது எனக்கு ஜாதி இல்லை ஜாதியை ஒழிச்சு தமிழ் தேசியம் வாங்குகிறேன்னு திரிந்து கொண்டு இருக்கிறார்கள். இட ஒதுக்கீடு என்பது பிச்சை அல்ல அது உரிமை எனும் வரலாறு தெரிந்தவர்கள் நான் பறையன், நான் பள்ளன், நான் சக்கிலியன், நான் தலித், நான் சாக்கியன், நான் அம்பேத்கர் வாதி என மார்தட்டி நெஞ்சை நிமிர்த்தி சொல்கிறார்கள்.  இட ஒதுக்கீடு என்பது இந்திய நாட்டின் அனைத்து வளங்களிலும் சாக்கிய (தலித்) சமூகத்துக்கு கிடைக்க வேண்டிய பங்கை கிடைக்க செய்வதற்கான திறவுகோல்.  அதை முழுமையாக அடைவதே சாக்கிய (தலித்) இயக்கங்களின் இலட்சியம்.


           SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT

No comments: