Tuesday, September 18, 2012

இன்னைக்கு அருந்ததிய மக்கள் ஒரு அமைப்பக பலம் பொருந்திய அரசியல் சக்தியாக  உருவாகி அந்த சமூகத்தில் உள்ள பெண்கள் தான் ஒரு அருந்ததிய பெண் என்று மார் தட்டி பெருமையாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சமூக உணர்வோடு வளர்ந்து உள்ளனர். உள் இட ஒதுக்கீடு எனும்  அவர்கள் குரலுக்கு ஆளும் வர்க்கமும் அதிகார சக்திகளும் செவி சாய்க்கும் நிலையில் உள்ளது. ஆனால், ஆதி திராவிடர்களுக்கும் பறையர்களுக்கும் அது போன்ற ஒரு இயக்கம் அமைப்பு தலைவன் தமிழகத்தில் இல்லை. இனியேனும் ஆதி திராவிட பறையர் இன மக்கள் தமிழ் திராவிடம் என்று பேசாமல் தங்கள் சமூக முன்னேற்றத்திற்கு தேவையான செயல் திட்டங்களை செய்தால் இந்த சமூகம் உருப்படும். அருந்ததியர் அவர்கள் மக்கள் தொகைக்கான உள்  இட ஒதுக்கீட்டை கேட்பது போல ஆதி திராவிட பறையர் இன மக்களும் தங்கள் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்  இட ஒதுக்கீடு கேட்பது அவர்கள் சமூகத்தில் இன்னும் வறுமை கோட்டுக்கு கீழே ஜாதிய வான் கொடுமைகளை அனுபவித்து வாழ்ந்து வரும் மக்களுக்கு பயன் தரும். மேலும் இச்சமூகத்தில் இட ஒதுக்கீட்டு உரிமை மூலம் வளர்ந்த சில தண்ட சோறுகள் திராவிடம் தமிழ் தேசியம் எனும் பெயரில் தங்கள் பணத்தையும் நேரத்தையும் விரயமாக்கி வரு கின்றனர். படித்த பட்டதாரிகளும்  அரசு ஊழியர்களும் பொருளாதார வளம் படைத்தவர்களும் தங்கள் பணத்தையும் அறிவையும் சில தமிழ் தேசிய கட்சிகளுக்கு விரயம் செய்து வருகின்றனர். இனியாகிலும் சிறிது சிந்தித்து தனது குடும்பம் சமூகம் இன்னும் பல கொடுமைகளை அனுபவித்து வருவதை உணர்ந்து இவர்கள் ஆதி திராவிட பறையர் சமூகமாக ஒருங்கிணைந்து செயல் பட்டால் நம் மக்கள் முன்னேற்றம் பெறுவார்கள். 

No comments: