Wednesday, December 5, 2012

தாழ்ந்து போகாமால் அடங்காமல் அடக்க முடியாமல் தனி சாம்ராஜ்யம் அமைத்து வாழ்ந்த குடும்பங்களும் எண்கள் சமூகத்தில் உள்ளன.

பட்டியல் இன மக்கள் என்று அரசே சொல்லுகிறதே. அப்படி சொல்லுங்க.. இல்லை சாக்கியர் என்று சொல்லுங்க.

ரொம்ப நன்றி பெருமாள். உடனே புரிஞ்சிக்கிட்டீங்க. தம்மத்தை பின்பற்றிய  சாக்கிய குல மக்கள். மா அரியர்கள். எல்லோராலும் ஆதியில் வணங்கப்பட்ட குலம்.

இப்பதான் சொல்லிட்டு இருக்கேன். இங்க பாருங்க இன்னும் ஒருத்தர் ஆரம்பிச்சுட்டார்.....

சாக்கியர், தலித், பட்டியல் இனம் என்பது எல்லோருக்கும் பொதுவானது தான். நாங்க உசந்தவங்க நாங்க உசந்தவங்க அபப்டின்னு சொல்லிகிறதுல தப்பு இல்ல அடுத்தவங்கள கீழ் தாழ்ந்த தாழ்த்தப்பட்டன்னு முத்திரை குத்தாதீர்கள். எங்களுக்கும் பெயர் உண்டு. நீங்க முக்குலத்தோர் போல. நாங்களும் சாக்கிய முக்குலத்தோர்தான். நாம் நம்மை ஒருவரை ஒருவர் மதிப்போம்.


எங்களுக்கு எந்த நாயும் சலுகை தர தேவை இல்லை. எந்த நாயும் கழிவிரக்கம் காட்ட தேவை இல்லை. நாங்கள் இந்த நாட்டின்  எங்களது பங்கு எங்களது உரிமையை நாங்கள் அனுபவிக்கிரோம். அதை முழுமையாக அடைய போராடுகிறோம்.

இந்த நாட்டின் குடி மக்களான எங்களுக்கு இந்த நாட்டின் அணைத்து சொத்துக்களிலும் சம உரிமை உண்டு அதை திருடி வைத்துள்ள திருட்டு கூட்டம் அதை முழுமையாக கொடுக்காமல் நாங்கள் போரடும்பது அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் என்று கொடுப்பதற்கு அனைத் திருட்டு கூட்டம் வைத்துள்ள பெயர் சலுகை.


இந்தியா இங்கிலாந்துக்கு அடிமையா இருந்துச்சுன்னு சொல்றாங்க. அப்புறம் 1947 இல் அடிமை இல்லை சுதந்திரம் அடைந்தது என்று சொல்றாங்க சுதந்திரம் அடைந்த உடன் இங்கிலாந்து கிட்ட இருந்து வாங்குன நிலன் புலன் எல்லாத்தையும் சமமா பிரிப்பது தான் மேல் மக்களின் நியதி. ஆனா திருட்டு கூட்டம் அதை பிரிக்காமல் அவுங்களே அமுக்கிட்டாங்க.

இந்த நாடு சொத்துக்கள் எல்லாம் சாக்கிய  பூர்வ குடிகளுக்கு தான் சொந்தம். இருந்தாலும் வந்தேறிகள் நீங்க வெளியே போங்கன்னு யாரையும் சொல்லல. யாதும் உரே யாவரும் கேளிர் என்பதே மேல் மக்களான எங்கள் பண்பு. இருப்பதை சமமாக பங்கிடுங்கள் என்பதே வாதம்.

அவர் தேவன்னு போட்டுகட்டும் அதுல பிரச்சனை இல்லை. எங்கள கீழ்மக்கள் தாழ்த்தப்பட்ட மக்கள்னு சொல்லி பரிதாப படுவதை நிறுத்த சொல்லுங்கள்.

அந்த திருட்டு கூட்டத்தை எதிர்த்து சலுகை கேக்கல. எங்கள் பங்கை கேட்டுகொண்டு இருக்கிறோம். முன்னாடி நிலா உச்ச வரம்பு கிடையாது. எல்லாத்தையும் மொத்தமா வச்சுட்டு இருந்தாங்க. இப்ப நிலா உச்ச வரம்பு. எங்க மக்களும் 20% பேர் நிலஉடமையாளர்கள். கொஞ்சம் பொறுங்க நிலா உச்ச வரம்பு இன்னும் குறையும். நாங்க 100 % நிலஉடமையாலரா ஆவோம்...


400 வருடம் இங்கிலாந்து ஆட்சி காலத்தில் தமிழர்கள் எப்படி  போலிஸ் ஸ்டேஷனில் குற்றபரம்பரை என்று கையெழுத்து போட்டார்கள். அது போலத்தான் ஆயிரம் வருடம் மண்ணின் மைந்தர்கள் தமிழர்களால் ஒடுக்கப்பட்டனர்.







No comments: