Tuesday, August 28, 2012

திண்ணை  பேச்சு ராமசாமியோடு  ஒப்பிடும்போது  பாரதி  புரட்சியாலர்தான் 

பாரதி பறையர்களுக்கு பூணூல் போட்டு அதனால் அவர் ஜாதி மக்களால் ஜாதியை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டவர் என்பது உண்மை எனில், அவர் செய்தது நியாயமா தருமமா நல்ல மனதுடன் செய்தாரா இல்லை சாக்கிய மக்களை இந்துவாக்க செய்தாரா அவர் கருணை நிறைந்தவரா இல்லை கபட வேடதரியா என்பது விவாதிக்க வேண்டிய விஷயம். அவருக்கு உள்ளே பார்ப்பன மனோ பாவம் சுத்தமா இல்லை என்பது நமது வாதம் அல்ல. ஆயிரம் உண்டு இங்கு ஜாதி இதில் அன்னியர் வந்து புகல் என்ன நீதின்னு கேட்கும்போதே அவர் அவுட் ஆயிட்டார். நீதியை கேட்க அன்னியர் வர கூடாதா? என் பொண்டாட்டிய நான் வெட்டுவேன் குத்துவேன் நீ எவன்டா கேள்வி கேட்கிறது நீ அவளை வச்சுகினு இருக்கியான்னு கேட்கும் மனோ நிலை தான் இது. ஆனா பாரதி நம்ம ராமசாமி போல கள்ளத்தனம் மிக்கவரா? இல்லை அறியாமை இருளில் இருந்தாரா? என்பது தான் கேள்வி. பாரதியை கேள்வி கேட்கும் சில சூத்திர கொழுந்துகளும் சூத்திர ராமசாமியின் ஜால்ராக்களும் பாரதியிடம் கேட்கும் அதே கேள்வியை என் இந்த சூத்திர ராமசாமியிடம் கேட்க மறுக்கிறார்கள். வைக்கம் கோயில் நுழைவு போராட்டம் நடக்கும் முன்னரே நம் மக்கள் நாங்கள் இந்துக்கள் அல்ல நாங்கள் சாக்கியர்கள் என்று பிரகடனம் செய்தது இந்த ராமசாமிக்கு நன்கு  தெரியும். இவருக்கு பகுத்தறிவை சொல்லி கொடுத்தவர்களே அவர்கள் தான்.  வைக்கம் நகரில் கோயில் நுழைவு போராட்டத்தை ஒருங்கினைத்தவர்கள் அழைப்பு விட்டபோது அதற்க்கு மறுப்பு தெரிவித்து நம் சமூக தலைவர்கள் கலந்து கொள்ள மறுத்ததும் இந்த ராமசாமிக்கு தெரியும். இருந்தும் அந்த கோயில் நுழைவு போராட்டத்தில் கலந்து கொண்டு வைக்கம் வீரர் ஆனார். சாமி இல்லை மாமி இல்லைன்னு ஒரு பக்கம் கதை விட்டுக்கொண்டு இன்னொரு பக்கம் சூத்திர கூட்டத்தை பூஜாரிகளாக ஆக்குங்கள் கர்ப்பகிருகத்தில் அவர்களையும்  அனுமதியுங்கள் என்று கேட்டாரே அதுக்கு என்ன அர்த்தம். இவர் இந்து இல்லை என்கிராரா? அல்லது  நாங்கள் இந்துக்கள் எங்களையும் கர்ப்பகிருகத்தில் அனுமதியுங்கள் என்கிறாரா? அல்லது  அப்படி அவர்  பேசியது புரட்சியா? சூதிரர்களை கோயில் பூஜாரிகலாக்கி கற்பகிருகதிற்குள் அனுமதிக்க கேட்பதே   புரட்சி என்றால், அதைதானே பாரதி செய்தார்.  நான் பிறப்பால் பார்ப்பனன் இல்லை  வேதங்களை கற்றதனால் பார்ப்பனன், வேதங்களை கற்கும் ஒவ்வொருவரும் பார்ப்பனர்  அவர்கள் பூணூல் போட தகுதி உடையவர்கள் என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் யாகம் வளர்த்து நாலு பறையர்களை அழைத்து பூணூல் போட்ட பாரதி, நம்ம திண்ணை  பேச்சு ராமசாமியோடு  ஒப்பிடும்போது  உண்மையிலே பெரிய புரட்சியாலர்தானே? இப்படி சொல்லுரதானால பாரதி பெருசா சாதிச்சிட்டார் அவரால ஜாதிகள் எல்லாம் ஒழிந்து விட்டது நாங்கள் எல்லாம் பார்ப்பனர்கள் ஆகிவிட்டோம் என்று அர்த்தம் இல்லை. ராமசாமி எனும் கபட வேதடாறியோடு ஒப்பிட்டு பார்க்கும் போது பாரதி  எவ்வளவோ மேல். தான் பிறந்த சமூகத்தை எதிர்த்துக்கொண்டு அவர் இதை செய்தார் என்பதும் அதனால் அவர் ஒதுக்கி வைக்கப்பட்டு ஒரு தீண்டதகாத மனிதராக  நடத்தப்பட்டார் என்பது உண்மை எனில் அவர் ஒரு கள்ளம் இல்லாத  நல்ல மனிதர் என்று சொல்லலாம்.

No comments: