Friday, August 17, 2012

அணுக்களை விட சிறிய துகள்களான கலாபத்தால் ஆனதே பிரபஞ்சம். மனிதரும் அந்த கலாபத்தால் ஆனவர்களே. கடவுள் படைத்ததோடு தனது வேலையை நிறுத்திக்கொண்டாரா இல்லை. இந்த இந்த பிரபஞ்சத்தை அவர்தான் இயக்கிக்கொண்டு இருக்கிறாரா? அவர் படைத்ததோடு தனது  வேலை முடிந்தது என ஓய்வு எடுத்துக்கொண்டால் இந்த பிரபஞ்சத்தில் இந்த சமூகத்தில் ஏற்ப்படும் மாற்றத்திற்கு அவர் கரணம் இல்லை.  கெட்ட  மாற்றங்களுக்காக அவரை திட்டவும் தேவை இல்லை!  நல்ல மற்றம் வர வேண்டும் என வேண்டவும் தேவை இல்லை. மாற்றங்கள் தானாக நடக்கும் அது அனிச்சை செயல். ஆனால் இன்னும் மேலே உக்காந்து நம்மை ஆட்டி படைக்கிறார் அவர் இன்றி ஊர் அணுவும் அசையாது அனைத்தும் அவன் செயல் என கப்சா விட்டால் வாயில கெட்ட கெட்ட வார்த்தையா வரும். ஏன்னா கஷ்டம் படுரவனுக்கு தான் தெரியும். சும்மா வேலைக்கு வேலை துன்னுட்டு கொழுதுப்போன சாமிகளுக்கு கடவுள் அள்ளி அள்ளி கொடுக்கும் ஆண்டவன். அடுத்தவேளை கஞ்சிக்கே வழி இல்லாமல் தெருவில் பிச்சை எடுக்கும் ஏழைக்கு தனது லீலைகளை கட்டும் ஈகோயிஸ்ட்டு. இதுல கஷ்டத்திலும் கடவுளை நம்பு அவர் வருவார் நீ சுடுகாட்டுக்கு போன பிறகு உன்னை சொர்கத்துக்கு கூப்பிட்டு போவார்னு இலவச அனுமதி சீட்டு வேறு. என்ன பாவம்ணா பண்ணு யாருக்கு வேணும்னா துரோகம் பண்ணு ஆனா சாகும் முன்னர் கடவுள் கிட்ட சரண் அடைந்தால்  டைரெக்டா சொர்கத்துக்கு போயிடலாம்னு அறிவுரை. ஒரு பக்கம் கருமவினை, நீ படும் துன்பத்துக்கு நீயே கரணம் மறு பக்கம் அவன் அன்றி ஓர் அணுவும் அசையாது அவனே காரணத்தின் கரணம். தலய சுத்துது சாமி. 

No comments: