Friday, August 17, 2012

///எங்களுக்கும் ஒரு தலைவன் இருக்கிறான் என்று தமிழ்நாட்டில் சொல்லக்கூடிய நிலையில் இருந்த ஒரே ஒரு ஆள் அண்ணன் திருமா மட்டுமே.////
எங்களுக்கும்னா தமிழரை சொல்றீங்களா? இல்லை நம்ம மக்களை சொல்றீங்களா. தமிழரை சொன்னா பரவாயில்லை. இவர் தமிழ் தேசிய தலைவர்தான். அவரும் அப்படி சொல்வதை தான் விரும்புகிறார. தலித் தலைவர் என்று தன்னை சுருக்கி கொள்ள விரும்பவில்லை என அவரே சொல்லியுள்ளார். இவருக்கு தலலைவர்கள் மேதகு தமிழ் தேசிய தலைவர்  பிரபாகரனும் தமிழ் இன தலைவர் டாக்டர் கலைஞரும் தான்.. இவரு எங்களுக்கு தலைவரு ஆனா இவருக்கு தலைவருங்க அந்த ஒற்றை கண் சிவராசும் கடத்தல் கந்தசாமியும். அப்படின்னா  இன்டைரக்டா எங்களுக்கு தலைவர்கள் அந்த ஒற்றை கண் சிவராசும் கடத்தல் கந்த சாமியும்னு சொல்ல வரீங்களா? ஐயா சாமி அந்த டெஷோ  மீட்டிங் பேச்ச கேளுங்க அண்ணன் குனிஞ்சி குனிஞ்சி குத்துரத. பேச்சுக்கு பேச்சு "தலைவர்  கலைஞர்"  "தலைவர்  கலைஞர்" "தலைவர்  கலைஞர்". இவரு வி சி கே தலிவரா இல்லை தி மு கா தொண்டரா?
எதுக்கு சாமி விடுதலை சிறுத்தைன்னு ஒரு டிராமா.  "தலைவர்  கலைஞர்" தான் தி மு கா ன்னு ஒரு கட்சி வச்சிக்கினு இருக்காரே அதுலியே இருக்க வேண்டியது தானே. அங்க இருந்தபோது எம் எல் எ சீட்டு கூட கொடுக்கல அப்புறம் என்ன "தலைவர்  கலைஞர்" . எப்பவோ செத்துப்போன கக்கன மட்டும் அடிமை அடிவருடின்னு திட்டுறீங்க இவர் மட்டும் என்னவாம்? தலித் மேடைக்கு வந்தா மட்டும் மாரை நிமிதிக்கிட்டு நிப்பாராம். . ஏன்னா, இங்க எல்லோரும் இவருக்கு தொண்டர்கள். திராவிட தமிழர் மேடைக்கு
போனா மட்டும் நல்லா குனிஞ்சி குனிஞ்சி குத்துவாராம். இது இந்த சமூகத்தின் சாபக்கேடா என்ன? கஞ்சிக்கு வழி இல்லாத நம் மக்கள் தான் ஜாதி இந்துக்களுக்கு பயந்து கையை கட்டி குனிந்து சேவகம் செய்கிறார்கள் என்றால் இந்த சமூகத்தின் தலைவன் என்று சொல்லிக்கொள்பவர்களும் ஒரு பக்கம் அம்மாவுக்கும் மறு பக்கம் ஐயாவுக்கும் குனிஞ்சி குனிஞ்சி கும்மி அடிக்கிறார்களே.
குறிப்பு: இருந்த அப்படின்னு இறந்த காலத்துல சொல்லி இருக்கீங்க. அது கூட கேள்வி குறிதான்.






No comments: