Wednesday, August 29, 2012

தலித் சக்தி தமிழ் தேசியத்துக்கு விரையம் ஆவதா 

தமிழ் தேசியத்தை திராவிடத்தை பெரியாரியத்தை பிரபாகரனை  சேரிக்கு கொண்டு வருவது நம் வேலை அல்ல அதை ஜாதி தமிழர்கள் செய்து கொண்டு இருக்கிறர்கள் நமது வேலை தலித்தியத்தை அம்பேத்காரியத்தை பண்டிதரை  ஊருக்குள் கொண்டு செல்வதே. மாசத்துல முப்பது நாள் முப்பது நாளைக்கு முப்பது அறிக்கை முப்பது நிகழ்ச்சி. இன்னைல இருந்து ஒரு ஆறு மாசத்துக்கு கணக்கு எடுப்போம். நம்ம அகரன் தினமும் வி சி க தலைமை செயலக நிகழ்ச்சிகளை போடட்டும். நாம் தொடர்ந்து அதை கண் கானிப்போம். இதில் எத்தனை அறிக்கைகள்  நமக்கானது எத்தனை அறிக்கைகள் டமிள் டேசியதுக்கானது என்று பார்ப்போம். டமிள்  ஊடகங்கள் அண்ணன் டமிள்  தேசியத்துக்கு செய்யும் வேலைகளை போடட்டும் அகரன் போன்றவர்கள் அண்ணன் நமக்காக செய்யும் வேலைகளை போடட்டும். வைகோ  உடும்  அறிக்கை சீமான  உடும்  அறிக்கை நெடுமாறன்  உடும்  அறிக்கைகள். அவைகளுக்கு சமமா அண்ணன் உடும் அறிக்கை எத்தனை சதவிகிதம். அண்ணன் நமக்காக உடும் அறிக்கைகள் போராட்டங்கள் நமக்காக செய்யும்  வேலைகள்  எத்தனை என்பதை நாம் இன்று முதல் கண்காணிப்போம். நமக்கான செயல் திட்டங்கள். அறிக்கைகள், பொது நிகழ்வுகள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள், கண்டன ஆர்ப்பட்டங்கள் எத்தனை என்பதை பார்ப்போம், முதலமைச்சரை பிரதமரை அண்ணன் சந்தித்து நமக்கான பிரச்சனைகளுக்காக ஆலோசனை நடத்துகிறாரா  என்று நாம் கண்காணிப்போம். அப்புறம் சொல்லுங்க நமக்கான வேலைகள் அங்கு நடக்கிறதா இல்லையா என.  இந்திய அரசு நமக்காக செலவிட வேண்டிய  ஒரு ஆயிரம் கோடி ரூபாயை இதுவரை செலவிடாமல் அமுக்கி வைத்துள்ளது நமக்கு சொந்தமான் லட்சக்கணக்கான ஏக்கர்  நிலங்கள் ஆதிக்க ஜாதியினர் அமுக்கி வைத்துள்ளனர், நூற்றுக்கணக்கான ஆதிதிராவிட பள்ளிகள் விடுதிகள் அடிப்படை வசதி இல்லாமல் உள்ளன ஆயிரக்கணக்கான  குடும்பங்கள் இருக்க வீடு இல்லாமல் அகதி முகாம்களை விட கேவலமான நிலையில் வாழ்ந்து வருகிறார்கள் லட்சக்கணக்கான வன்கொடுமை குற்றங்கள் தீர்ப்பு வழங்கப்படாமல் நீதி மன்றங்களில் தூங்கிக்கொண்டு இருக்கின்றனர். தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட ஆயிரம் ஆயிரம் இடங்கள் பூர்த்தி செய்யப்படாமல் ஆதிக்க ஜாதிகளால் அனுபவித்து வரப்படுகின்றன, வேலை வாய்ப்பு இன்றி வாழ்வாதாரம் இன்றி வறுமையால் பசியால்  தினம் தினம் நம் மக்கள் செத்து கொண்டு இருக்கிறார்கள், ஆயிரம்  ஆயிரம் மக்கள் இன்னும் மலம் அள்ளி வாழும் நிலை. வாரத்துக்கு ஒரு இஷு எடுத்தால் கூட போதும். 1964 இல் தான் இறக்கும் சில தினங்களுக்கு முன்னால் தந்தை சிவராஜ் லட்சக்கனக்காண மக்களை திரட்டி டில்லியில் மண்ணுரிமை போராட்டம் நடத்தினார் அதற்க்கு பிறகு மண் உரிமைக்காக அப்படி ஒரு போராட்டம் இது வரை எந்த தலித் அரசியல் கட்சியாலும் நடத்தப்படவில்லை. இப்போது நம்மால் அதை விடபன் மடங்கு சிறப்பான ஒரு போரட்த்தை நடத்த முடியும். அந்த போராட்டம் இந்திய நிலங்களை எல்லாம் நாட்டுடமை ஆக்கும் ஒரு மாபெரும் சட்ட மற்றதை ஏற்படுத்தலாம். இந்தியத்தை எதிர்க்கிறோம்  ஈழத்தை மீட்க போகிறோம் இலவம் பஞ்சை புடுங்க போகிறோம்னு சொல்லிட்டு செத்து போகாமல் வாழும் காலத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்த முடியும். நாம் ஈழம் இலவம் பஞ்சுன்னு நாய் மாதிரி கத்தினாலும் ஒரு நாயும் நம்மை ஏற்க்கப்போவது இல்லை. ஒரு நாயும் நம்மை நடு வீட்டில் வைத்து கும்பிட போவது இல்லை. நம்மை நம்பி நம் மக்கள் உள்ளனர் வாழும் கொஞ்ச காலம் அவர்களுக்காக வாழுவோம். ஆயிரம் ஆயிரம் மக்கள்  நம்மை நம்பி உள்ளனர் அவர்களுக்கு நல்  வழி கட்டுவோம். கத்திய எடு கத்தரிக்காயை  அறுன்னு சினிமா வசனம் பேசாமல் பொறுப்பான தலைவனாக ஒரு தந்தை ஸ்தானத்தில் அவர்களுக்கு நல் வழி காட்டுவோம். சமூக ஒழுக்கம் சமூக கடமை என்ன என்பதை அவர்களுக்கு சொல்லுவோம். இந்த சமூகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் சமூகத்துக்கு செய்ய வேண்டிய கடமைகள் ஏறாலம். நாம் இன்று விடும் விடுதலை மூச்சு சுவாசிக்கும் காற்று அனுபவிக்கும் உரிமைகள் அனைத்து ஆதிக்க பண்ணை ராமசாமி நாயக்கராலோ புளிகொட்டை பிரபாகரனாலோ வந்தது அல்ல அது நம் மக்களின் உழைப்பு நம்  மக்கள் சிந்திய ரத்தம் அண்ணல் அம்பேத்கர் முதல் நம் சொந்தங்கள் ஏழுமலை ஜான்தாமஸ் போன்றவர்கள் செய்த தியாகங்கள். வி சி க என்பது திருமா எனும் தனிமனிதரின் தியாகத்தால் மட்டும்  எழுந்த கட்சி அல்ல அதற்க்கு பின்னால ஆயிரம் ஆயிரம் சொந்தங்களின் ரத்தமும் தியாகமும் அடங்கி உள்ளது. அந்த கட்சி முழுக்க முழுக்க நமது சொந்தங்களின் ரத்தம் வேர்வை பணம் தியாகம் இவைகள் மூலமே கட்டமைக்கப்ட்டு வருகிறது. மருந்துக்கு கூட அதில் ஜாடி டமிலர்கல் இல்லை அப்படி இருந்தால் அவர்கள் வட்ட மாவட்ட பொறுப்பில் மட்டுமே இருக்கிறர்கள். அந்த கட்சியில் அடி மட்ட ஊழியம் செய்யும் அனைத்து மக்களும் நமது ரத்தங்கள். நமது  சக்தி நமது உழைப்பு நமது விடுதலைக்காக நமது உரிமைக்காக பயன்படுத்தப்பட வேண்டும். நாங்க பொது நாங்க  பொதுன்னு நாமதான் நாய் மாதிரி கத்திட்டு இருக்கோம். நாங்க தலித் கட்சி இல்லை நாங்க தமிழ் தேசிய கட்சி அப்படின்னு மேடை மேடையா சுய விளம்பரம் பண்ணிட்டு இருக்கோம். ஆனா அங்க ஒரு நாயும் நம்மை சீண்டுற மாதிரி தெரியில. சேரி எல்லையை தாண்டி ஒரு அடி கூட நம்மால் எடுத்து வைக்க முடியவில்லை. ஆணா  வூனா அண்ணன் பிபாகரன் அப்படி சொன்னாக என் கைய புடிச்சு சொன்னாக கட்டி புடிச்சு சொன்னாக  அப்படின்னு கைலாசம் போயி சிவ  பெருமான் கிட்ட வரம் வாங்கிட்டு வந்த மாதிரி டயலாக்கு. என்ன காம்பிலக்சோ தெரியில சாமி. ஆண்டை வீட்டுல பின் வாசல் வழியா போய்  பழைய கஞ்சி சாப்பிட்டு வந்துட்டு அந்த ஐயா தங்கம்னா தங்கம் அப்படி பட்ட தங்கம் நாம போனா டேய் கந்தா அம்மா பழைய காஞ்சி கொடுப்பா சாப்பிட்டு போன்னு சொலுவாரு அவரு தங்கம்னா தங்கம் அந்த அம்மா வயிரம்னா வயிரம். அவரு காஞ்சி மட்டும் கொடுக்க சொன்ன அந்த அம்மா கூட கொஞ்சம் கருவாட்டு துண்டு சேர்த்து கொடுப்பாங்க.  இன்னும் இந்த அசிங்கம் தொடருது. அவர் என்னை தொட்டாறு  கட்டி அனச்சாரு நம் மக்கள் வாயில பீய திணிப்பதை கேள்வி பட்டு துடியா துடிச்சாரு அவரு வீரரு சூறாரு ஐயோ இந்த சமூகம் என்ன பவம் பன்னுச்சோ இப்படி ஒரு ஆமாஞ்சாமி  ஐயா சாமி வந்து நம்ம தலைல உக்கார ..........













No comments: