Thursday, August 30, 2012

ஈழத்து தலித் பற்றி பேச தலித்திய சிந்தனை உள்ள தலித் தலைவர் தேவை

தலித் பிரச்சனைய மட்டும் பேச சொல்லல. பொது பிரச்சனை என்று சொல்லப்படும் இடங்களில் கூட தலித்திய சிந்தையோடு அதை அணுக முடியும் என்கிறேன். தமிழ் நாட்டுல சுனாமி வந்தபோது நம் மக்கள் சுனாமியில் நம் மக்களின் நிலை என்ன என்று கேட்டார்கள். ஒரு சிலருக்கு இது ஷாக். என்னடா மக்கள் சுனாமில செத்து கிடக்கிறான் இங்க வந்து இவனுங்க ஜாதி  பாக்குரானுங்க என்று.  இழவு வீட்ல போய் செத்தவங்க என்ன ஜாதின்னு கேக்குரதான்னாங்க. நாம ஜாதி பாக்கள இப்போ ஜாதி பேர்ல நடந்த  கொடுமைகள பாத்தோம். பொதுவா போனவங்க "மீனவர்" பகுதிகளுக்கு மட்டும் போயிட்டு  அவுங்களுக்கு உணவு துணின்னு கொண்டு கொடுத்தாங்க. ஆனா ஒருத்தரும் நம்ம கடற்க்கரை ஓர சேரிகளுக்கு போகல. மீனவர்களும் அவங்களை போக விடல. கேட்டா  நாங்க தான் மீனவர்கள் எங்களுக்குத்தான் பாதிப்பு அவுங்க வெறுமனே வந்து உதவி கேக்குறாங்க என்று சொன்னாங்க.  நம்ம சமூக அமைப்புகள் கடற்க்கரை ஓரத்தில் உள்ள சேரிகளுக்கு போனார்கள் அங்கு நம்ம மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு பற்றி அறிக்கை தயார் செய்து அதை மற்றவர்களுக்கு விளக்கி அது வரை போகாத நிருவனங்களை அரசை போக வைத்தார்கள். அதுக்காக மீனவர்களுக்கு பாதிப்பே இல்லை அவர்களுக்கு எதுவும் கொடுக்க கூடாது என சொல்லவில்லை. ஆனால் இயற்க்கையால் நடை பெற்ற சீற்றம் பொதுவாக இருப்பினும் அங்கு தீண்டாமை நம் மக்களை எந்த உதவியும் அடைய விடாமல் தடுத்தது அதை நாம் மையப்படுத்தி மறுவாழ்வு திட்டங்கலை செயல் படுத்த வேண்டும் என அரசுக்கு கோருவது நமது அரசியல். ஈழ விடுதலை பற்றி எல்லோரும் பேசுறான் நாமும் பேசுறோம் அதில் நமது மக்கள் பற்றிய சிந்தனையும் இருக்கவேண்டும் என்பதே தலித்தியம். ஈழம் என்று பொதுவாக மட்டும் பேசாமல் அங்குள்ள தலித் மக்களுக்காவும் அவர்கள் முன்னேற்றத்திற்க்காகவும்  பேசுவதே தலித்தியம். மலையக மக்கள் பெரும்பாலும் நம்ம மக்கள்.மற்ற இலங்கை குடிகளுக்கு உள்ள பொதுவான அடிப்படை உரிமைகள்  கூட அவர்களுக்கு இல்லை. இலங்கையின் பூர்வீக தமிழர்கள் என சொல்லிக்கொள்ளும் தமிழர்களுக்கு உள்ள உரிமைகள் கூட இந்த மக்களுக்கு இல்லை. இது நமது பிரச்சனை இல்லையா? இலங்கையை பொறுத்தவரை இன்னும் இவர்கள் இந்திய பிரஜைகளே. அவர்கள் வாழ்க்கைக்கு இந்திய அரசாங்கம் நினைத்தால் பல்வேறு உதவிகள் செய்யலாம். நாம் பொதுவாக மட்டும் ஈழம் என்று பேசிக்கொண்டு இருக்காமல் இந்திய அரசுக்கு சிறிது  பிரஷர் கொடுத்தால், இந்த மக்களுக்கு இந்தியா மூலம் பல்வேறு உதவிகள்  செய்யலாம். அவர்கள் இந்தியாவுக்கு வர வேண்டிய தேவை இல்லை அனால் இலங்கையில் இருந்து கொண்டே இந்திய பிரஜைக்களுக்கான பல்வேறு சலுகைகளை அவர்கள் அடையலாம். அவர்கள் பிள்ளைகளுக்கு இங்கு கல்வி வசதி செய்து கொடுக்கலாம். அவர்கள் இங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கு (SC ) கிடைக்கும் சலுகைகளை பெற ஏற்ப்பாடு செய்யலாம். இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தானில் குடியிருந்த மக்கள் இங்கு திரும்பி வந்து பல்வேறு சலுகைகளைஅனுபவித்து  வருகின்றனர் அது போன்ற சலுகைகளை அங்கு உள்ள நம் மக்கள் அனுபவிக்க நாம் ஏற்ப்பாடு செய்யலாம். தற்போது  பல்வேறு முன்னேற்ற திட்டங்கள் இலங்கையில் நடைமுறைக்கு வந்து உள்ளது அதில் நம் மக்கள் பங்கு பெறுகின்றனரா அவர்களுக்கு முன்னேற்ற திட்டங்கள் போய் சேருகின்றதா என ஆய்வு செய்ய வேண்டிய அவசியம் உள்ளது அது நமது வேலை இல்லையா. இது போல ஈழ பிரச்சனைகளிலும் நமது பிரச்சனைகள் உள்ளன அதைபற்றி பொது மேடைகளில் பேச நமக்கு ஆள் இல்லை பாராளுமன்றத்தில் பேச ஆல் இல்லை. சுனாமியில் செத்த மீனவனும் மனுஷன் தான் தலித்தும் மனுஷன் தான் ஆனால் அங்கு நாம் தலித்திய சிந்தனையில் சென்றதால் நம் மக்களுக்கு நடந்த கொடுமைகளை பார்க்க முடிந்தது. சுனாமியில் செத்த மக்களை மொத்தமாக புதைக்கும்போது ஒருபக்கம் மீனவருக்கான புதை குழி மறு பக்கம் தலித் புதை குழி.
 ஆதிக்க ஜாதி மீனவர்கள் நம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய அடிப்படை உரிமைகளை கூட எப்படி பிடுங்கிக்கொண்டார்கள் என்பதை அங்கு  பார்க்க முடிந்தது. அது போலதான் இலங்கை பிரச்சனையும். அங்கு இலங்கை  ராணுவம் மக்களை கொன்றபோது செத்தவர்கள் அவர்களும் தான் நம் மக்களும் தான். ஈழ தமிழ் சொந்தங்கள் என்று எல்லோர் பற்றியும் பொதுவாக பேசுகிறீர்கள் ஆனால் அதே ஈழத்தில் நம்ம மக்களுக்கு இன்னும் அவர்கள் ஆப்பு வைத்துக்கொண்டு தான் இருக்கிறார்கள். இங்கு எப்படி ஜாதி வெறியும் அதிகார வெறியும் தலை விரித்து ஆடுகிறதோ அது போலத்தான் அங்கும் ஆடுகிறது. இயற்கையில் செத்த மீனவர்களுக்கு இறக்கப்டுவது போல இலங்கையில் செத்த தமிழர்களுக்கும் இரக்கப்படுகிறோம் ஆனால் அந்த சாவை காட்டி எமது மக்கள் மீது நடத்தப்படும் உரிமை மீறல்கலை பேசக்கூடாது என்கிறது ஆதிக்க  ஜாதி. அது டமிளர்களின் ஒற்றுமையை குழைத்து விடுமாம் எப்படா நீங்க எங்களோடு ஒத்துமையா இருந்தீங்க.
ஈழம் பற்றி பேசும்போது அங்கு உள்ள நம் மக்கள் பற்றி பேசுவது தான் தலித் சிந்தனை. அப்படி பேசுவதற்கு தலித்திய சிந்தனை உள்ள தலித் தலைவர் தேவை.
















No comments: