Friday, November 23, 2012

5%. வன்னியர்களின் ஆதரவு கூட இல்லாத ராமதாசு வன்னியர் அரசியல் செய்து தி மு கா அ தி மு க எல்லாவற்றையும் கண்ணில் விரலை விட்டு ஆட்டும்போது நாம் ஏன் சாக்கிய அரசியல் பண்ண கூடாது. 19% சாக்கிய மக்கள் என்பது ராமதாசை ஆதரிக்கும் 5%. வன்னியர்களை விட பெரியது. ராமதாசால் எல்லா வன்னியர்களையும் ஒருங்கிணைக்க முடியாது. தலித் மக்களை நாம் ஒருங்கிணைக்கலாம். இதுதான் உத்தரபிரதேசத்தில் மான்வர் கன்ஷிராம் மற்றும் பேகன்ஜி மாயவதி நடத்திய நடத்தும் அரசியல். அவர்கள் சேரிகளை திரட்டினார்கள். ஒவ்வொரு சேரியும் பி எஸ் பி யின் கோட்டையைக உள்ளது. அங்குள்ள ஒவ்வொரு சாக்கியரும் பி எஸ் பி யாக உள்ளனர். நாம் நம் மக்களை ஒருங்கிணைத்தால் மற்றவர்கள் தானாக வருவார்கள். தமிழ் தேசியம் பேசினாலும் தக்காளி தேசியம் பேசினாலும் ஒரு ஜாதி இந்துவும் வர மட்டன். ராமதாஸ் தமிழகத்தில் செய்யும் அரசியலை நம் மக்கள் 15 வருடத்துக்கு முன்னர் உ பி யில் செய்தனர். தமிழ் தேசிய திராவிட கட்சிகளில் இருக்கும் நமது மக்களை மீட்போம். அதற்க்கு முதலில் அவர்கள் மனதில் உள்ள நாம் தமிழர்  நாம் திராவிடர் எனும் மாயைகளை உடைப்போம். இனி எவரும் நம்மை ஏமாற்ற முடியாத அளவுக்கு மதில்களை கட்டுவோம். 
நாங்க பொது நாங்க தமிழர் நாங்க திராவிடர் என்று சொல்லி திரியும் தலைவர்களையும் கட்சிகளையும் புறக்கணிப்போம்.  நமக்கான அரசியல் களம் அமைப்போம். தேர்தல் நேரங்களில் யாரோடு வேண்டுமானாலும் கூட்டு அது எந்த கட்சியாக இருந்தாலும் பரவாயில்ல ராமதாசோ, ஜெயாவோ, சோனியாவோ, கருணாவோ என்பது நமக்கு பிரச்சனை இல்லை யார் நமக்கு அதிக சீட்டு தருகிறார்களோ யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதோ அவர்களிடம் சேருவோம். ஆனால் தேர்தல் முடிந்ததும் நமக்கான கருத்து நமக்கான அரசியல் நமக்கான உரிமைகள் நோக்கி நமது களம் இருக்க வேண்டும். 


No comments: