Friday, November 23, 2012

தர்மபுரியில் நடந்தது ஜாதி கலவரம் இல்லை. அங்கு நடந்தது சாக்கிய மக்களுக்கு எதிரான ஜாதிய வன்கொடுமை. எங்களுக்கு தேவை பாதிக்கபட்டவர்களுக்கு நீதி. வன்கொடுமை செய்தவர்களுக்கு தண்டனை. எங்களுக்கு ராமதாசும் திருமாவும் நடத்தும் மத நல்லிணக்கமோ சமூக நல்லினக்கமோ தமிழர் ஒற்றுமையோ அவசியம் இல்லை. இவர்கள் நடத்தும் அரசியல் நாடகம் திருடர்களை,  கொள்ளையர்களை, வீடு கொளுத்திகளை, ஜாதி வெறியர்களை சட்டதில் இருந்து தப்பிக்க வைக்குமே ஒழிய பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்காது. இரண்டு பக்கமும் சமமான பாதிப்பு என்றால் மத்தியசம் பேச திருமாவையும் ராமதாசையும் அழைக்கலாம். இங்கு இழப்பு எங்களுக்குத்தான். எங்களுக்கு தேவை நீதி. இது வன்னியர்கள், ப ம க, வன்னியர் சங்கம் செய்தது அல்ல நீண்ட கால பகையின் காரணமாக அணைத்து ஜாதியினரும் சேர்ந்து செய்த செயல் என்கிறார் ராமதாஸ். அப்படின்னா குற்றம் செய்தவர்களை தண்டனையில் இருந்து கப்பாற்ற  ராமதாஸ் கச்சை கட்டிக்கொண்டு வருவது ஏன்? இந்த செயலை செய்த அனைத்து ஜாதியினரும், அனைத்து கட்சியினரும் தண்டனை பெறவேண்டும் என்று அவர் சொல்ல மறுக்க கரணம் என்ன? சொந்த வீட்டில் அண்ணன் தம்பி அடித்துக்கொண்டால் கூட சட்டம் பாய்கிறது. இங்கு இருவர் அடித்துக்கொள்ளவில்லை. பறையர் வீடுகளை வன்னியர்கள் கொளுத்தி இருக்கிறார்கள் கொள்ளை அடித்து இருக்கிறார்கள். இது சட்டத்திற்கு எதிரான செயல். இது போல சட்டத்திற்கு எதிரான செயல்களை எதிர்வினைகளை நடக்காமல் இருக்க சட்டம் தனது கடமையை செய்யும் எனும் நம்பிக்கையில்  இருக்கும் சாக்கிய குடிகளுக்கும் தர்மபுரில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கும் தனி மனிதர்களுக்கும் சட்டம் தனது கடமையை செய்ய வேண்டும். இன்மேல் இது போன்ற வன்கொடுமைகள் நடக்காமல் பாதுக்காக்க புதிய சட்டங்களும் செயல் திட்டங்களும் அமைக்கவும் தமிழக இந்திய அரசை நிர்பந்திக்க வேண்டும் இதை விட்டு விட்டு கலப்பு திருமணம் காதல் திருமணம் ஜாதி ஒழிப்பு தமிழர் ஒறுமை மத நல்லிணக்கம் ஜாதி நல்லிணக்கம் என்று நாடகம் நடத்து நடிகர்களை ஓரம் கட்டி தர்மபுரியை தலித் அரசியல் ஆக்குவோம். தர்மபுரி வன்முறையில் ஈடுபட்ட ஒவ்வொரு வன்னியனையும் சிறைக்கு அனுப்புவோம். 

No comments: