Friday, November 23, 2012

சிவகாமி தாயே சீக்கிரம் வாயேன். இவ்வளவு தெளிவான சிந்தனை தெளிவான கருத்து ஆழமான சமூக அரசியல் பொருளாதர அறிவு  ஆழ்மனதில் சாக்கிய பறையர் எனும் உணர்வு . சாக்கிய மக்களின் வருங்காலம் விடிவுகாலம விடுதலை உங்களை போன்ற சாக்கிய பெண்களின் கையில் தான் உள்ளது.   

இந்த இண்டர்வீவ் சிவகாமி IAS அவர்களின் கருத்தையும் உணர்வையும் வெளிப்படுத்துகிறது.  சிவகாமி இருபத்து ஐந்து வருடங்களாக தொடர்ந்து சமூக பணியில் ஈடுபட்டு வருவது முக்கியமாக நில மீட்பு பத்திரிக்கை மூலம் அவர்கள் ஆற்றிய பணிகளை மறைக்க மறுக்க முடியாது. அவர் அரசு ஊழியராக இருந்த காலம் முதல் நமது இயக்கத்தில் ஈடுபாடு உடையவர். இந்த பேட்டியில் ஒவ்வொரு இடத்திலும் அவர் தெளிவாக தனது கருத்துக்களை பதிந்துள்ளார். ஒரே ஒரு இடத்தில் தமிழ் சமூகம் என்று பேசினாலும் இனங்களுக்கு அப்பால் உள்ள மனித ஒற்றுமையை பேசுகிறார். "இது உங்களுடைய அரசாங்கம் எங்களுடைய அரசாங்கம் இல்லையே" என்று சொல்லுவது அவரது சமூக உணர்வையும் தைரியத்தையும் காட்டுகிறது. இது போல நம்முடைய பிரதிநிதியாக மீடியாக்களில் பேச நமக்கு ஆள் இல்லை. பொது இடத்தில் பேசும்போது நான் பொது நான் தமிழன் நான் திராவிடன் என நடிக்கும் கூட்டமே இன்று அரசியல் செய்து கொண்டு இருக்கிறது. அது போல  நடித்துக்கொண்டு இருக்காமல் தனது அடையாளத்தை மறைக்காமல் அவர் பேசுவது வரவேற்க வேண்டி ஒன்று. திராவிட தமிழ் தேசிய சூத்திர அரசியலை எதிற்க சிவகாமி IAS  போன்ற தன்மானமுள்ள சாக்கிய பெண் நமக்கு தேவை. அவரை பற்றிய எனக்கு உள்ள ஒரே விமர்சனம்  அவர் பண்பாட்டு அரசியலை கையில் எடுக்க தயங்குவதுதான். அது பற்றி அவரிடம் பல முறை சொல்லியாச்சு. அதை அவர் ஏற்றுக்கொண்டால் அவர் பெர்பெக்ட் மாயாவதி ஆப் தமிழ் நாடு. 



 

No comments: