Wednesday, November 21, 2012

ஜாதி வெறி மத வெறி இன வெறி பிடித்து யார் மற்றவர்களை தாக்கினாலும் கண்டிக்கப்பட் வேண்டியவர்களே! நான் ஏன் பாலஸ்தீனம் பற்றி பேசாமல் தர்மபுரியை பற்றி பேசுகிறேன்? எனக்கு எது முக்கியமோ அதைத்தானே பேச முடியும். தர்மபுரியை பற்றி பேசாத பலர் பாலஸ்தீனம் பற்றியும் ஈழம் பற்றியும் பேசுகிறார்கள். யாருக்கு எது முக்கியமோ அதை தான் ஒவ்வொருவரும் செய்வார்கள். சின்மயீயை எதிர்த்த எத்தனை பேர் தர்மபுரி ஜாதி வெறியர்களை எதிர்க்கிறார்கள்? நான் யாரயும் ஏன் எங்கள் பிரச்சனையை பேச மறுக்கிறீர்கள் என்று கேட்கவில்லை. அவர் அவர் பிரச்சனை அவர் அவர்களுக்கு பெரியது. என்னுடைய கேள்வி. அதுக்கு அப்புறம் எதுக்கு நானும் நீயும் ஒன்னு நாமெல்லாம் தமிழர்கள் திராவிடர்கள் பாட்டாளி வர்க்கம் என்று ஏமாற்றிக்கொண்டு இருக்கிறீர்கள் என்றுதான் கேட்கிறேன். தர்மபுரிக்கு ஏன் குரல் கொடுக்க மறுக்கிறீர்கள் என்று அருந்ததிய தேவேந்திர குல சகோதரர்களை கூட நான் கேட்க மாட்டேன் (குரல் கொடுக்கும் அன்பு நேசங்களுக்கு நன்றி). என்னை பொறுத்தவரை தர்மபுரியை பொறுத்தவரை அடுத்தவர்கள் நாமக்கு குரல் கொடுப்பார்கள் நீதி கேட்டு போராடுவார்கள் என்று மெத்தனம் கட்டாமல் பறையர்கள் அனைவரும் தங்கலது உணர்வுகளை வெளிப்படுத்த வேண்டும் வன்னிய ஜாதி வெறியர்களுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்பதே. இதை பேசாமல் மூடி மறைப்பதால் நீதி கிடைக்கப்போவது மில்லை  சமூக நல்லிணக்கம் ஏற்பட போவதும் இல்லை. இது போல பறையர்கள் எங்காவது மற்ற சமூகத்தை தாக்கினாலோ துன்புரித்தினாலூ அதுவும் தவறுதான் அவர்களால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களை எதிர்த்து விமர்சனம் செய்யலாம் ஜாதி வெறியர்கள் என திட்டலாம். 

No comments: