Friday, November 23, 2012

காதல் கத்தரிக்கா கலப்பு திருமணம் எனும் நாடகங்கள் நமக்கு விடுதலை தராது. இது திராவிட தமிழ் சினிமா அரசியல். காதலித்தவனுக்கு தெரியும் அது ஒரு மன நோய் என்று.காதலித்து நம்மோடு ஓடிவந்த ஜாதி ஹிந்து பெண்களை விட காதலித்து பின்னர் நம்மை விட்டு ஓடிப்போன ஜாதி இந்து பெண்களே (ஆண்களே) அதிகம். காதல் வருதா நம்ம "அட்டகத்தி" ஹீரோ போல அனுபவியுங்கள்.  தோத்த பின்னர் தாடி வச்சு சோக கீதம் பாடுவதை விட்டு விட்டு வாழ கற்றுக்கொள்ளுங்கள். காதல் என்பது மனசு உடல் சம்பத்தப்பட்ட விஷயம். அது புனிதம் அது ஜாதிய ஒழிக்கும்னு அதுக்கு மகுடம் சூட்ட வேண்டாம்.  அமெரிக்கா ஐரோப்பிய நாடுகளில் இதுபோல யாரும் காதல் மன நோய் பிடித்து அலைவதில்லை. பொருள்  சார் வாழ்க்கை எப்படி வாழ்வது என்று அவர்களுக்கு தெரியும். அதனோடு நாம் தம்மத்தை இணைத்தால் அருள்  சார்ந்த வாழ்வு எப்படி வாழ்வது என்பதையும் நாம் புரிந்து கொள்ளலாம். காதல் கலப்பு திருமணம் எனும் பசப்பு வார்த்தைகளுக்கு மயங்காமல் சாக்கிய  அரசியல் மற்றும் பண்பாட்டு வியுகம் அமைப்போம். 

No comments: