Sunday, November 25, 2012

இப்பதான் பதினாறு வயசுல காதல் செய்ய ஆரம்பித்து இருக்குற மாதிரி நமது திராவிட கூட்டமும் திராவிட ஜால்ரா கூட்டமும். காதல் செய்வீர் ஜாதியை ஒழிப்பீர்னு காதலர் தினம் கொண்டாடிட்டு இருக்கிறார்கள். இன்னமோ வரலாற்றில் காதலே நடக்காதது போலவும் வன்னியரும் பறையரும் கலக்காதது போலவும் ராமசாமி நாயக்கர் வந்து ஒரு பெரிய புரட்சி பண்ணி காமனை அழைத்து வந்து வில்லை வளைத்து காமத்தை வன்னியர் மனதிலும் பறையர் மனதிலும் ஊட்டி அவர்களை காதலிக்க வைத்து ஜாதியை ஒழித்தது போலவும் இந்த கூட்டம் பேசிக்கொண்டு இருக்கிறது. வன்னிய பெண்கள் பறையர் பையன்களோடு காதல் காமம் திருமணம் செய்தது ஓடிப்போனது எல்லாம் வாழ்வியல் வரலாறு அதை யாரும் சொல்லவும் தேவை இல்லை தடுக்கவும் தேவை இல்லை தடுக்கவும் முடியாது. ஏற்கனவே நடந்து கொண்டு இருக்கும் காதல் கல்யாணங்களுக்கு  அரசியல் முத்திரை குத்திக்கொண்டு இருக்கிறது திராவிட தமிழ் தேசிய கம்யுனிச கூட்டங்கள். ஆண்டாண்டு காலமும் நடந்து கொண்டு இருக்கும் இந்த கலப்பு திருமணங்கள் ஜாதியை ஒழித்ததா அல்லது புதிய ஜாதிகளை உருவாக்கியதா? ஆணாதிக்க சமூகத்தில் வன்னிய ஆணை கல்யாணம் செய்து கொண்ட தலித் பெண்கள் வன்னியர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் வன்னிய பெண்ணாகஅதே ஊரிலும் அல்லது வன்னிய பெண்ணாக நகரங்களிலும் வந்து செட்டில் ஆகிறார். பறையர்களால் திருமணம் செய்யப்பட்ட வன்னிய பெண்கள் சேரியிலும் அல்லது நகரத்துக்கு ஓடிவந்து நகரத்தில் பறையர்க செட்டில் ஆகிறார். பெண் ஆதிக்கம் செய்யும் இடதில் ஆண் தனது அடையாளத்தை விட்டு விட்டு பெண்ணின் அடையாளத்தை ஏற்கிறார். நாங்கள் கலப்பு திருமணம் செய்து கொண்டோம் எங்களுக்கு ஜாதி இல்லை என்று சொல்லும் ஒரு சிறு கூட்டம் தங்களை  புதிய ஜாதிகளாக திராவிட ஜாதி தமிழ் ஜாதி இந்து ஜாதி என்று பிரகடன படுத்திக்கொள்கின்றனர். ஜாதி ஒழிப்பு திருமண அரசியல் என்பது ஜாதி இந்துக்களின் மொள்ளமாறி தனத்தை மூடி மறைக்க திராவிட கூட்டம் நடத்தும் நாடகமே அன்றி அவை தலித் மக்களுக்கு அரசியல், பொருளாதார சமூக விடுதலையை பெற்று தராது. இந்த கலப்பு திருமாண, கோயில் நுழைவு போராட்டங்களை அன்றே அண்ணல் தோல் உரித்து காட்டி உள்ளார். நம் மக்களை ஒருங்கிணைப்பது மூலமும், நமது கருத்துக்களை, நமது கொள்கைகளை மக்களிடம் எடுத்து செல்வதும், நமக்காக களம் அமைத்து போராடுவதும் மட்டுமே நமது உரிமைகளை மீட்டு எடுக்கும்.




No comments: