"இந்திய தேசத்திற்கு பொது பாஷையாயிருக்க வேண்டியவை ஆங்கில பாஷையாம் மற்றுமுள்ள பாஷைகள் யாவிலும் சாதிபேத போராட்டங்களை வரைந்துள்ளக் கட்டுக்கதைகளே மிக்கபெருகி நீதி நெறி வாக்கியங்களுங் கெட்டு நிலைகுலைந்திருக்கின்றபடியால் இந்தயாவில் வழங்கி வரும் தற்க்கால பாஷைகள் யாவையும் பொது பாஷையாக ஏற்றுக்கொள்வது வீனேயாம். ஆங்கில பாஷையை கற்பதால் ஜாதி பேதம் ஒழிந்து போம், சமயபேதம் ஒழிந்துபோம், வஞ்சினங்களகன்று போம், பட்சபாத மற்றுப்போம், சகலரும் அன்பு பொருந்தியிருப்பார்கள், வித்தையும் புத்தியும் பெருகும். வீண் விவகாரங்களும் வீண் செயல்களும் அறும். உலகத்திலுள்ள எம்மனுக்களைக் காணினும் ஆங்கில பாஷையை பேசி ஆனந்தமாக நேசிக்கலாம்." பண்டிதர் அயோத்திதாசர்......
No comments:
Post a Comment