Wednesday, November 21, 2012

////பூனா ஒப்பந்தம் போல தமிழ் தேசியத்தால் ஏமாற்றப்பட்ட திருமா ஒரு அண்ணலாக மாறும் தருணம் மிக சமீபத்தில் உள்ளது./// பூனா ஒப்பந்தத்தில் அண்ணல் ஏமாறவில்லை. நிர்பந்த படுத்தப்பட்டார். கண்ணீரும், கவலையும், கோபமும், விரக்தியும் அவரை ஆட்கொண்டு இருந்தது வேறு வழி இல்லாமல் அந்த மாமனிதர் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டார். அண்ணல் முழுக்க முழுக்க சாக்கிய மக்களின் பிரதிநிதியாக இருந்தார். அன்று அவர் இந்திய தேசியம் பெசிக்கொண்டு இருக்கவில்லை. சாக்கிய மக்களின் சமூக உரிமைகளை பேசிக்கொண்டு இருந்தார். இங்கு திருமா ஏமாற்றப்படவில்லை லட்சக்கணக்கான பறையர்களை ஏமாற்றிகொண்டு இருக்கிறார். நான் பறையன் இல்லை நான் தலித்  இல்லை நான் தமிழன் நான் யார் ஒடுக்கப்பட்டாலும் பேசுவேன் பொது மனிதன் என்று அறிக்கை விட்டுகொண்டு இருக்கிறார். அவரை நமது பிரதிநிதி என்பதும் அவர் நமக்காக போராடுவார் என அதிர் பார்ப்பதும் முட்டாள் தனம். தமிழ் நாட்டில் இட ஓதிக்கீட்டில் எம் எல் ஏ க்கள் ஆகி ஜாதி இந்துக்களுக்கு ஜால்ரா அடிப்பது போல இவர் ஒரு தமிழ் தேசிய ஜால்ரா? அவருக்கு நமது வலியும் உணர்வும் புரியம் என்று நினைப்பது நமது முட்டாள் தனம். இவ்வளவு நடந்த பிறகும் எனது கட்சி பொது கட்சி, என் கட்சி பறையர்களை ஜாதி பார்த்து சேர்க்கும் கட்சி அல்ல நாங்கள் தமிழ்ர்களாக  எங்களை இணைத்துக்கொள்கிறோம் என்று பொது அரசியல் பேசிக்கொண்டு இருக்கிறார். அண்ணல் அம்பேத்கர் சாகும் வரை ஷெட்யுல்ட் மக்கள் கூட்டமைப்பில் (Scheduled Caste Federation)  உறுப்பினர் என்பது இங்கு குறிப்பிட வேண்டிய அவசியம். நாம் பொது கட்சி ஆரம்பித்தால் கூட நமக்கான உரிமைகளை பெற நமது அமைப்பு இயங்க வேண்டும் என்று தனது மக்களுக்கு சொன்னவர் அவர். அடையாளத்தை மறைத்து பொது அரசியல் பேசும் திருமா ஒருபோதும்  அண்ணலின் வழிக்கு வரமாட்டார். உலகத்தில் ஆயிரம் ஆயிரம் துன்பங்கள் இருந்தாலும் அவை எல்லாவற்றையும் சுமக்கும் சக்தி எனக்கு இல்லை இந்த பிறவியில் நான் சுமக்கும் ஒரே சுமை எனது சாக்கிய சமூகத்தின் துன்பத்தை போக்கும் பணிதான் என்று  தான் சாகும் வரை சாக்கிய மக்களுக்காக அயராது உழைத்தவர் அண்ணல். 

No comments: