Tuesday, October 23, 2012

புத்த சரணம் கச்சாமின்னு சொல்லிட்டு அடுத்தவங்க சாமி சிலைய உடைக்கறவன் நிச்சயம் உண்மையான பவுத்தன் இல்லை

புத்த சரணம் கச்சாமின்னு சொல்லிட்டு அடுத்தவங்க சாமி சிலைய உடைக்கறவன் நிச்சயம் உண்மையான பவுத்தன் இல்லை, தானும்  வாழனும் பிறரும் வழனும்ன்னு நினைக்கிரவன்தான் உண்மையான பவுத்தம். எங்களுக்கு படைப்புக்கடவுள் மீது நம்பிக்கை கிடையாது, நாங்க நாத்திகம் பேசிட்டு விநாயகர் சிலை உடைக்கும் கூட்டம் இல்லை, பூணூல் அறுக்கும் கூட்டமும் இல்லை, அதே சமையம், நாங்கள் பன்றிகள்  கூட்டம் போல போட்டதை தின்னுவிட்டு சும்மா இருக்க முடியாது. எங்களுக்கு மதம், மொழி, கலாச்சாரம், பண்பாடு எல்லாம் வேண்டும். ஆடல், பாடல், திருவிழா, விகாரங்கள், சிலைகள்,  வழிபாடு, புனித தலங்கள், வழிபாட்டு தலங்கள் எல்லாம் வேண்டும். தியானம் தவம் யோகம் எல்லாம் எங்களுக்கு தேவை, திருமணம், பிறந்தநாள் விழா, நினைவு நாள் விழா எல்லாம் எங்களுக்கு தேவை, புத்தர்  அண்ணல் அம்பேத்கர் பண்டிதர்  மற்றும்  போதிசத்துவர்கள்  கடவுளோ அல்லது அவதாரமோ கிடையாது, ஆனால் அவர்கள் வணக்கத்துக்கு  உரியவர்கள். நாங்கள் தனிமனிதர்கள் அல்ல சமூகம். நாங்கள் கூடி பேச விஹாரங்கள்  எழுப்புவோம், வணக்கத்துக்கு உரியவர்களுக்கு சிலை எழுப்பி கோயில் கட்டி கொண்டாடுவோம். எங்களது தத்துவம்  நாத்திகர்களுடையது போல விரக்தியின் தத்துவம் அல்ல அது மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் கொண்டுவரும் அன்பின் தத்துவம். எல்லா உயிர்களும் இன்புற்றிருக்கட்டும் "பவது சப்ப மங்கலம்" என்பதே எங்கள் தாரக மந்திரம். இதையே நாங்கள் எப்போதும் சொல்லி தவம் செய்வோம்.....புத்த சரணம் கச்சாமின்னு சொல்லிட்டு அடுத்தவங்க சாமி சிலைய உடைக்கறவன் நிச்சயம் உண்மையான பவுத்தன் இல்லை. 

No comments: