Sunday, October 14, 2012

நீ சொன்னாலும் சொல்லாட்டியும் நான் பறையன் தான். அதில் எனக்கு பெருமையும் கூட. என்னை பற்றி நான் பெருமை பட்டுக்கொள்வதை உன்னால் சகித்துக்கொள்ள முடியவில்லை எனில் நான் என்ன செய்வது. நீ உன்னுடைய சமூகத்துக்கு உருப்படியா எதையாவது செய்ய பார் திராவிடத்துக்கு தமிழ் தேசியத்துக்கு சொம்பு தூக்கி உன் நேரத்தை வீணாக்குவதை விட உன் சமூக முன்னேற்றதுக்கு எதையாவது செய். நான் என் சமூக முன்னேற்றத்தை பற்றி சிந்திக்கிறேன், எதையோ செய்கிறேன்  அது போல நீ உன் சமூக விடுதலைக்காக சிந்தி, எதையாவது செய். அடுத்தவர் உன்னை விடுவிப்பார்கள் என எதிர்பார்க்காதே. அடுத்தவர்களின் கழிவிரக்கம் உன்னை அடிமையாகவே வைத்து இருக்கும். புத்தனின் அடிப்படை போதனை "அத்த தீபா பவ". நீ தான் உனக்கு தீபம், விளக்கு, ஒளி. வேறு யாரும் உன்னை விடுவிக்க மாட்டார்கள். மற்றவர்களிடம் பிச்சை எடுப்பதை விட்டு விட்டு உனது விடுதலைக்கு நீ போராடு. நான் உனது விடுதலைக்கு தடை யாக இருப்பின் என்னையும் எதிர்த்து போராடு. நான் உன்னை கரை சேர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்கதே. அப்படி எதிர்பார்ப்பது அடிமை தனம். உன் விடுதலை உன் கையில். நான் அடுத்த சமூகதுக்கு உழைத்து விடுதலை வங்கி கொடுத்தேன் என்று சொல்வதே அந்த சமூகத்துக்கு இழிவை தேடி தருவதே. நாங்கள் பறையர்களுக்கு விடுதலை வாங்கி கொடுத்தோம் என ராமசாமியும் அவரது கூட்டமும் சொல்லுவதை நான் ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன். அது போலவே பறையர்களும் அவர்களது தலைவர்களும் அருந்ததிய மக்களுக்கு சுதந்திரம் வாங்கி கொடுத்தார்கள் என்று சொல்லுவதையும் நான் அனுமதிக்க மாட்டேன். அருந்ததியர்களின் முன்னேற்றமும் சுதந்திரமும் அவர்களின் சுய சிந்தனை சுய போராட்டத்தின் மூலமே கிடைக்கும். அது தான் அவர்களை விடுவிக்கும். நாம் அனைவரும் சில இடங்களில் ஒருங்கிணைந்து போராட வேண்டும் எனில் அன்புடன் ஒருவருக்கு ஒருவர் அழைப்பு கொடுப்போம். அப்படி போராடுவதன் மூலம் கிடைக்கும் பலன் முன்னேற்றம் விடுதலை என்பது நம் எல்லோர்க்கும் பொது. அது நான் உனக்கு வாங்கி  கொடுத்தது அல்ல நீ எனக்கு வாங்கி கொடுத்தது அல்ல. அது நாம் நமக்க்காக போராடி பெற்ற உரிமைகள்..  அருந்ததிய மக்களை நான் மதிக்கிறேன். அவர்களுக்காக அவர்களின் நலனுக்காக சிந்திக்கும்  போராடும் மக்களை நான் மதிக்கிறேன். பறையர் சமூகத்தில் பிறந்த சிலர் தாழ்வாக நடத்துவதை நானும் எதிர்க்கிறேன். அப்படி பட்டவர்கள் தங்களை  பறையர்கள் என்று சொல்லிக்கொல்வது இல்லை.  தன்னை பற்றிய தாழ்வு மனப்பான்மை உள்ள தறுதலைகள் தான் பிற சமூகத்தை தாழ்வாக நினைக்கும். பறையர் என்பதில் பெருமிதம் கொள்ளும் ஒவ்வொரு பறையரும் புத்தரையும்,  பண்டிதரையும், தாத்தாவையும், அண்ணலையும் நெஞ்சில் சுமப்பவர்கள் அவர்கள் அருந்ததிய சமூக மக்களை தனது சொந்த மக்களாக பார்ப்பார்களே ஒழிய ஏளனமாகவும், கேவலமாகவும், இழிவாகவும் ஒரு போதும் பார்க்க மாட்டார்கள். அவர்களது போராட்ட குரல் என்பது நாங்கள் யாருக்கும் அடிமை இல்லை எங்களுக்கு யாரும் அடிமை இல்லை என்பதே. மீண்டும் சொல்வேன் மார்  தட்டி நெஞ்சை நிமிர்த்தி நான்  பறையன்..........






No comments: