Tuesday, October 23, 2012

இங்கு அவர் பகுத்தறிவு பற்றி பேசலை கடவுள் இல்லை மதம் இல்லை எனும் நாத்திக தத்துவத்தை பேசுகிறார். கடவுள் இல்லை என சொல்லும் கம்யுநிஸ்டுகள் தான் மக்கள் உணர்வுகளை மதிக்காமல் ரஷியாவில் சர்சுகளை எல்லாம் மூடினவர்கள். சைனாவில் புத்த கோயில்களை எல்லாம் மூடினவர்கள். டமில்  நாட்டில் பூணூலை அறுத்தும் விநாயகர் சிலையை உடைத்தும் ஹிந்து கடவுள் சிலைகளுக்கு செருப்பு மாலை போட்டும் சாதனை பண்ணினார்கள். உண்மையான பகுத்தறிவு பேசிய பண்டிதரும் அண்ணலும் எங்களுக்கு புத்தம் சரணம் கச்சாமின்னு சொல்லி கொடுத்தாங்க ஆனா மத்த கடவுள்கள் சிலைகளை உடைக்கவோ செருப்பு மாலை போடவோ சொல்லி கொடுக்கல. நமக்கு பிடிக்கலையா விட்டு தூர விலகி வந்துடுங்கன்னு எங்களை அன்பின் உருவம் பகவான் புத்தரின் காலடியில் கொண்டு போய் சேர்த்துட்டு போயிட்டாங்க. எங்களுக்கு கடவுள் உண்டுன்னு நம்பிக்கையும் இல்லை கடவுள் இல்லைன்னு அடுத்த மாதவர்கள் கிட்ட சண்டையும் இல்லை. உண்டு என்பார்க்கு உண்டு இல்லை என்பார்க்கு இல்லை எங்களுக்கு அந்த கவலையே இல்லை. எங்க பகுத்தறிவு உலகில  உள்ள துன்பத்தை பற்றியதும் அந்த துன்பத்தை போக்கும் பாதையை பற்றியதும். தேவை இல்லாமல் இவர் கடவுள் மறுப்புக்கு எங்களை வம்புக்கு இழுக்கிறார். 

No comments: