Tuesday, October 16, 2012

அகில இந்திய அளவில் அருந்ததியினர் ஒடுக்கப்பட்ட தலித் மக்களா?

அகில இந்திய அளவில் அருந்ததியினர் ஒடுக்கப்பட்ட தலித் மக்களா?

சமார் தான் இந்தியா முழுக்க இருக்கிறார்கள். எல்லா உயர பதிவிகளிலும் அவர்கள் தான் இருக்கிறார்கள். ஒரு சமார் பெண்மணிதான் பதினைந்து வருஷத்துக்கு மேல ஒரு மாநிலத்தின் முதல்வரா இருந்தாங்க அடுத்த பிரதமரா வருவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கு. மத்திய அரசு பணிகளில் அவுங்க தான் அதிகம் இருக்காங்க அதிகமான எம் பிக்கள் அவுங்க தான் இருக்காங்க.  நாம அவுங்களை பார்த்து வயிறு எரிவதில்லை மேலும் நம் மக்கள் என்று பெருமை தான் படுகிறோம். பறையரை பள்ளரை மலாவை மகாரை திட்டும் இந்த அருந்ததிய சகோதரர் சம்மார்களை மட்டும் திட்ட மாட்டாராம். திருமாவை பறையன் என்றும் கிருஷ்ண சாமியை பள்ளர் என்றும் ஆதிக்க தலித் ஜாதி என்றும் திட்டுவாராம், அனால் மாயாவதியை ஆதிக்க தலித் ஜாதி என்று திட்ட மாட்டாராம். அதுல என்ன அரசியல்ன்னு கேட்டா  சமார், மாதிகா, சக்கிளியர், அருந்ததியர் எல்லாம் ஒன்னாம், பறையர், பள்ளர், மாலா மாகார் எல்லாம் வேறவாம். பறையர் பள்ளர் மகார் எல்லாம் சுய ஜாதி வெறியர்கலாம், சமார் மட்டும் ரொம்ப நல்லவங்களாம். தமிழ் நாட்டுல அருந்ததியர் சிறுபான்மையினர் என்பது உண்மை தான். ஆனால் அகில இந்திய அளவில் சமார்கள் ஆதிக்க ஜாதி தானே. இந்த அருந்ததிய சகோதரர் நியாயமான தலிதுன்னா சமார்களையும் ஆதிக்க தலித் ஜாதின்னு திட்ட வேண்டியது தானே. தமிழ் நாட்டுல அருந்ததியர்க்கு உள்  இட ஒதுக்கேடு கேட்பது போல அகில இந்திய அளவில் சிறுபான்மையினறான மகார், பள்ளர், பறையர், மாலா மக்களுக்கு உள் இட ஒதுக்கீடு கேட்டு வாங்கி கொடுத்தால் எங்க மக்களும் சமார்களுக்கு சமமா மத்திய அரசுகளில்  வேலை வாய்ப்பு  பெறுவார்களே.






No comments: