Wednesday, October 10, 2012

பறை இசையாலும் பறை அடையாளத்தாலும் வந்தவர்தான் இளையராஜா

இளையராஜாவுக்கு பறையர் முத்திரை குத்தி நாங்க அமுக்க பக்குரோமாம். தமிழ் இல்லை என்றாலும் இளைய ராஜா இசை மக்களை போய்  சேரும். அவர் பாட்டுக்கு மயங்கியவர்களை  விட அவர் இசைக்கு மயங்கியவர்களே அதிகம். ஆனா, பறை இசை இல்லைனா அவர் இல்லை. நான் ஆறாவது படிக்கும்போது என்னோடு படிச்ச ஒரு ஜாதி தமிழ் பையன் "பறையன் பற மோளம் அடிக்கிரான்ன்னு" சொன்னான். அவனுக்கு அது ஏதோ கேவலம் ஆனால் எனக்கு அது பெருமை. அப்படி எங்கள் பறை இசையாலும் பறை அடையாளத்தாலும் வந்தவர்தான் இளையராஜா. தமிழ் தெலுகு மலையாளம் ஆங்கிலம் என எந்த பாட்டுக்கு இசைத்தலும் அங்கு இருப்பது பறை பறை பறை. பறை இல்லை எனில் இளையராஜா இல்லை. இளையராஜா மட்டும் இல்லை  இசையே இல்லை. அவர்  சொன்னாலும் சொள்ளளநாலும் அவன் "பறையண்டா".............

1 comment:

Nalliah said...

தமிழ் திரையுலகில் பாபி,குர்பானி,சத்யம் சிவம் சுந்தரம் உள்ளிட்ட இந்தி திரையிசையின் தாக்கம் மிகுதியாக இருந்த காலக் கட்டத்தில் ,நவ நாகரீக தூதுவர்கள் என்று தன்னை அறிமுகப் படுத்திக் கொள்ள துடித்த இளைஞர்களின் உதட்டில் இந்திப் பாடல்களே உட்காரத் துவங்கியது.
அந்த நேரத்தில்தான் அன்னக் கிளி படம் மூலம் ஒரு குக்கிராமத்தில் இருந்து,தாழ்த்தப் பட்ட குடும்பத்தில் பிறந்து,கருத்த நிறத்தில்,சினிமா உலகிற்கென வகுக்கப் பட்ட எந்த ஒரு இலக்கணத்திற்கும் உட்படாத ,
சாஸ்திரீய சங்கீத நுணுக்கங்கள் ஏதும் அறியாத,எளிய மக்களின் அடையாளமாய் நுழைந்த இளையராஜாவின் பிரவேசம் நடந்தது