ராமசாமி மந்திரம் சொல்லி கொடுக்கும் ராமசாமி முரசா?
தமிழ் நாட்டுல தலித் முரசுன்னு ஒரு பத்திரிக்கை. அவர்கள் பதினைந்து வருடமா பன்ன சாதனை. அந்த பத்திரிக்கையில் அவர்கள் விமர்சிக்காத தலித் தலைவர்களே இல்லை. பண்டிதர் அயோத்திதாசரை அருந்ததிய மக்களுக்கு எதிரியாக காட்டி அவர்கள் புரிந்த சாதனை ஏராளம். பறையர் சமூகத்தையும் அருந்ததியர் சமூகத்தையும் மோத விட்டு வேடிக்கை பார்த்து சாதனை படைத்தவர்கள். அண்ணல் அம்பேத்கரையும் அவர்கள் விட்டு வைத்தது கிடையாது. அவரை பற்றியும் பல விமர்ச்சனங்கள். புத்தர் கையில் கத்தியை கொடுத்து அவரை வன்முறையாளர் என்று சொல்லி சாதனை படைத்துள்ளனர். பவுத்தம் பற்றி இவர்கள் பண்ணாத விமர்ச்சனங்கள் இல்லை. கேட்டா இவுங்க நடு நிலை பத்திரிக்கை நடத்துராங்களாம். சுய விமர்ச்சனம் பண்ணி சாதிக்கிறார்களாம். சரிப்பா பதினைந்து வருஷமா சுய விமர்சனம் பண்ணி சாதிச்சீங்களே, எப்பவாச்சம் தாடிகார தாத்தாவ பத்தி ஒரு சின்ன விமர்ச்சனம் பண்ணி இருக்கீ ங்கலா? தலித் சிந்தனையாளர்களிடம் இருந்து அப்படி ஒரு விமர்ச்சனம் வரும் போதெல்லாம் பதில் கொடுத்து அவர்களுக்கு பார்பனிய அடிவருடி ஹிந்துத்துவ அடிவருடின்னு பட்டம் கொடுத்து ராமசாமியை தூக்கி தூக்கி வைத்து சாதனை புரியும் உங்கள் பத்திரிக்கை தலித் முரசா இல்லை தலித்துக்களுக்கு ராமசாமி மாந்திரம் சொல்லி கொடுக்கும் ராமசாமி முரசா?
No comments:
Post a Comment