////தலித் பந்தர்ஸ் ஆக இருக்கும் போது மதுரையை விட்டு வெளியே தெரியாத இய
க்கத்தை./// என்ன பாலா திருமா அண்ணன் உங்க கண்ணை மறைக்கிறாரா? எழுபதில் தலித் சிறுத்தைகளாக
இருக்கும்போதே, சிறுத்தைகள் இயக்கம் உலகம் முழுக்க தெரியும். இன்னைக்கு நாம சொல்லிட்டு இருக்கிற தலித் எனும் பெயரை உலகம் முழுக்க பரப்பியவர்கள் தலித் சிறுத்தைகள். பல பன்னாட்டு பலகலை கழகங்களில் அதுபற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு உள்ளன. மகார்ஷ்டிர மாநிலத்தில் தொடங்கி இந்தியா முழுக்க பரவி துவண்டுபோன தலித் இயக்கத்தை தட்டி எழுப்பிய இயக்கம் தலித் சிறுத்தைகள் இயக்கம். எண்பதுகளில் தலித் சிறுத்தைகள் அம்பேத்கர் சிறுத்தைகள் ஒடுக்கப்பட்ட சிறுத்தைகள் என பல்வேறு பெயர்களில் தலித் மக்கள் தங்களை சிறுத்தைகளாக அடையாள படுத்தியது வரலாறு. திருமா எனும் தனி மனிதருக்காக ஒரு மாபெரும் இயக்கத்தின் வரலாற்றை மறுதலிப்பதும் மறைப்பதும் மிகப்பெரிய துரோகம். மாவீரன் மலைச்சாமி தலித் பந்தர்ஸ் ஆப் இந்தியா எனும் கட்சியை ஆரம்பிக்கும் முன்னரே அது இயக்கமாக மக்களிடையே பரவி இருந்தது என்பது வரலாறு. திருமா என்ன செய்தார் மலைசாமி என்ன செய்தார் என்பது அந்த இயக்க வரலாற்றின் ஒரு அங்கம். அதை அகில இந்திய அளவில் தோற்றுவித்த நாம்தேவ் தாசல் போன்றவர்கள் பெயர் கூட நிறைய பேருக்கு தெரியாது அந்த அளவு அது மக்களின் இயக்கமாக இருந்து என்பது வரலாறு. திருமா அதுக்கு என்ன செய்தார் எப்படி செய்தார் என்பது கேள்வி அல்ல. அதை சூத்திர புலி கூட்டத்திற்கு தாரை வார்ப்பது தான் நமக்கு பிரச்சனை. யாரை பார்த்து யார் காப்பி அடிப்பது. தலித் சிறுத்தைகள் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் அரை கூவல் அது அம்பேத்கர் வாதிகளால் புத்த தம்மிகளால் வர்க்க புரட்சியை உள்ளடிக்கிய இயக்கம். அதை ஆதிக்க ஜாதி ஆதிக்க வர்க்க மதவாத வல்லரசு நாடுகளின் துணையோடு செயல்பட்ட புலி கூட்டத்துடன் ஒப்பிடுவதா என்பதே கேள்வி. புலிகளை மனதில் வைத்து இயக்கம் ஆரம்பிக்க நினைத்தால் "தமிழக புலி கூட்டம்" என ஆரம்பித்து இருக்கலாமே. எதற்கு நாங்கள் உருவாக்கி வளர்த்து எங்களின் அடையாளமாக வைத்துள்ள சிறுத்தை இயக்கத்தை சூத்திர புலி கூட்டத்தினருக்கு தாரை வார்க்கவேண்டும். திருமாவுக்கும் அவர் கூட்டத்துக்கும் தலித்துன்னு சொன்னா கேவலாமா இருக்கு தமிழர்ன்னு சொன்னா பெருமையா இருக்கு அப்புறம் எதுக்கு தலித் மக்கள் உருவாக்கிய தலித் அடையாள சொல்லான சிறுத்தை. சிறுத்தை என்றாலே தலித் தலித் என்றாலே சிறுத்தை என்பது இந்தியாவில் உள்ள அனைவருக்கும் தெரியும். அது திருமா சொன்னதால் வந்தது அல்ல தலித் சிறுத்தைகளின் இயக்கத்தால் வந்த உணர்வு. தலித் எங்களுக்கு வேணாம் தலித் அடையலாம் வேணா நாங்க தமிழர்னு பொது அடையலதுக்குள்ள போயிட்டு இருக்கிறோம்னு சொல்லிட்டு இருக்கும் திருமாவுக்கும் அவர் கூட்டத்திற்கும் மானம் ஈனம் சூடு சுரணை இருந்தால் தலித்துக்கள் உருவாக்கிய தலித்துக்களின் அடையாளமான சிறுத்தை என்பதை விட்டு விட்டு தமிழர்களின் அடையலமான் புலிகளை ஏற்றுக்கொள்ள வேண்டியதுதானே. நாங்க கஷ்டப்பட்டு போராடி இரத்தம் சிந்தி ஒரு இயக்கத்தை உருவாக்குவோம் அடையாளத்தை உருவாக்குவோம் அதை இவுங்க தமிழுக்கும் திராவிடத்துக்கும் ஹிந்துத்துவத்துக்கும் கூவி கூவி விப்பாங்க. இப்ப நாங்க சாக்கியா சாக்கியான்னு பேசிட்டு இருக்கோம் ஒரு அம்பது வருடம் கழித்து இது பெரிய ஆலமரமா எழுச்சியோடு இருக்கும். திருமா மாதிரி ஒருத்தர் வருவாரு வந்து அதுக்கு தமிழ் சாக்கியான்னு ஒரு பேர் வச்சு அது தமிழ் தேசிய தலைவர் மேதகு பிரபாகரனின் கருத்தில் உருவானது என்று சொல்லி கூவி கூவி விப்பாரு. எழுபதுகள் எண்பதுகள் என இரண்டு டிகேட்ஸ் (1970 & 1980) தலித் சிறுத்தைகள் தங்களது இயக்கத்தை வளர்த்து எடுத்த பிறகு அதில் தன்னை இனைதுக்கொண்டவர்தான் திருமா. திருமா எனும் தனி மனிதருக்காக தலித் எனும் மாபெரும் சமூகத்தையும் தலித் இயக்கம் எனும் மாபெரும் இயக்கத்தையும் தாரை வார்க்காதீர்கள். தனி மானிதர்கள் வருவார்கள் சாவார்கள் சமூகம் என்பதும் அதன விடுதலைக்காக கட்டமைக்கப்ட்ட இயக்கம் என்பதும் ஆயிரம் காலத்து பயிர். சிறுத்தைகள் இயக்கம் என்பது தலித் மக்களுக்கான இயக்கம் அவர்களின் விடுதலைக்கான இயக்கம் அதை தமிழர்களுக்கான தமிழ் புலிகளுக்கான துணை அமைப்பாக ஆக்கிவிடாதீர்கள்.
No comments:
Post a Comment