விமர்சனம் பண்ணாதீங்க விமர்சனம் பண்ணாதீங்க அப்படின்னு சொல்ரீங்க நீங்க மத்த தலித் தலைவர்களை விமர்சனம் பண்ணாம இருக்கீங்களா? ஏதோ உங்களுக்கு முன்னால இருந்தவ தலித் தலைவர்களும் ஒண்ணுக்கும் உதவாதவர்கள் போலவும் நீங்க வந்துதான் எல்லாத்தையும் புடுங்கி புடுங்கி நட்ட மாதிரி இல்ல பேசுறீங்க. உங்களுக்கு முன்ன இருந்த தலைவர்கள் உங்களை போல பிரபலமாகாதவர்கள்தான். அவர்கள் உண்மையானவர்களாக நேர்மையனவர்களாக உழைப்பாளிகளாக தியாகம் நிறைந்தவர்களாக இருந்தார்கள். பேச்சுக்கு பேச்சு கொலைகார கூட்ட தலைவனையும் அவன் இயக்கத்தையும் மட்டுமே பேசும் உங்களுக்கு இந்த தியாக சீலர்களின் தியாகம் கண்ணுக்கு தெரியவில்லையே. அந்த தியாகிகள் கட்டிய கோட்டையில் அந்த தியாகிகள் சிந்திய ரத்ததில் வந்ததுதான் தலித் இயக்கம். அவர்கள் போட்ட பிச்சையால்தான் இன்று ஆடம்பர அரசியல் நடத்த முடிகிறது. விமர்சனம் பண்ணாதீங்க விமர்சனம் பண்ணாதீங்க அப்படின்னு சொல்ரீங்க, நீங்க ராஜபக்ஷேவை, சீமானை, ஜெயாவை, பீ ஜேபியை, காங்கிரசை, கருணாநிதியை விமர்சிக்காமல் அரசியல் செய்ய முடியுமா. அரசியல் என்பது அடுத்தவர் தவறை சுட்டி காட்டுவதே. விமர்சனம் இல்லை எனில் அரசியல் செய்ய முடியாது மெய்ஞான தேடலில் இறங்க வேண்டியதுதான்.
No comments:
Post a Comment