Thursday, August 23, 2012

பள்ளிக்கூடம் படிச்ச போது  ராமசாமிய படிச்சவரு கல்லூரி போனபோது ஈழத்த பத்தி படிச்சவரு தனது கிராமத்தில் தான் பிறந்த நாள் முதல் நடந்துவந்த ஜாதிய கொடுமை என்றால் என்ன என்று கூட உணராமல் வளர்ந்து அரசு ஊழியர் ஆன பிறகே சாதியத்தையும் தீண்டாமையையும் அம்பேத்காரியத்தையும் இவர் தெரிந்துகொண்டார் என்பது இவர் வரலாறு. அப்படி அவருக்கு தலித்திய உணர்வும் ஜாதி ஒழிப்பு சிந்தனையும் வந்தது உண்மை எனில் அதை அவருக்கு சொல்லிக்கொடுத்தவர்கள் தலித் சிறுத்தைகள். இவர் மதுரைக்கு போகும் முன்னரே அங்கு மலைசாமி ஜான்பாண்டியன் போன்றவர்களின் தலைமையில்  ஆதிக்க தமிழ் ஜாதிகளை எதிர்த்து தலித் மக்கள் போராடிக்கொண்டு இருந்தார்கள் என்பதே வரலாறு. 
வாட தமிழகத்தில் மூ சுந்தரராசனார், மூர்த்தியார், வை பா, சக்திதாசன் என தலைவர்கள் இயக்க பனி ஆறியதும் வரலாறே. எண்பதுகளில் இந்தியா முழுக்க ஜாதிய ஒடுக்கு முறைக்கு எதிரான  எதிர்ப்பு குரல் ஓங்கி கொண்டிருந்த காலம் அது. ஜாதிய ஒடுக்கு முறை தீண்டாமை என்பது போய் ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான சண்டைகள் நடைபெற்ற காலம் அது. அந்த இயக்கத்தின் அதிர்வினால் உருவான தலைவர்தான் திருமா, 
திராவிடமும் தமிழ் தேசியமும் ஏற்காத  இன்று வரை ஏற்க மறுக்கும் இந்த திருமாவை சிம்மாசனத்தில் உட்கார வைத்து பார்த்தவர்கள் பார்ப்பவர்கள் தலித் சிறுத்தைகள். பொன் விழா எடுக்கும் அவருக்கு பொற்காசுகளை கொண்டுவந்து கொட்டுபவர்கள் இந்த தலித் சிறுத்தைகள். புலிகளின் வரலாற்றை சொல்ல ஆயிரம் "சீ" மான்களும் "வை" கோமான்களும் உள்ளனர். நாம் நமது வரலாற்றை சொல்வோம், நமது வரலாற்றை பேசுவோம், நமது வரலாற்றை எழுதுவோம், நமது வரலாற்றை வென்றெடுப்போம். ஊருக்குள் பிறக்க வேண்டிய பலர் சேரிக்கு உள்ளேயும் சேரிக்கு உள்ளே பிறக்க வேண்டிய பலர் ஊருக்குள்ளும் தப்பி பிறந்துள்ளனர். அப்படி பிறந்தவர் எல்லாம் நேர்மையான வழியில் பிறக்கவில்லை கள்ள உறவில்  பிறந்தவர்கள். நாம் புலிகளுக்கு பிறந்த சிறுத்தைகள் என்று சொல்வதும் அப்படித்தான். நாம் புலிகளுக்கு பிறந்த சிறுத்தைகள் அல்ல சிறுத்தைகளுக்கு பிறந்த சிறுத்தைகள். நாங்கள் சிறுத்தைகளுக்கு பிறந்த புலிகள் என புலிகள் தான் நம் வாழ் முறையை வழி முறையை பார்த்து பெருமை பட்டுக்கொள்ள வேண்டுமே ஒழிய நாம் புலிகளுக்கு பிறந்தவர்கள் என்று சொல்லி நாம் புலி பெருமை பேசிக்கொண்டு இருக்க கூடாது. நமக்கு நமக்கான அடையாலம் நமக்கான கொள்கை நமக்கான கோட்பாடு நமக்கான பாதை என்று அமைத்து நமது இயக்கத்தை கட்டமைக்க வேண்டிய அவசியத்தில் உள்ளோம். அதில் சிறிது பிசகினாலும் அதன் விலை மிக அதிகம் இருக்கும், நம்மோடு இருப்பவர்கள் எத்தனை பேர் என்பது முக்கியம் அல்ல எவ்வளவு கருத்தாழம் கொண்டவர்களாகவும் தியாக குணம் படைத்தவர்களாகவும் உள்ளார்கள் என்பதே அவசியம். அண்ணன் புலி தேசிய கூட்ட தலைவர் பெயரை சொன்னவுடன் விசிலடிக்கும் கூட்டம் இந்த சமூகத்துக்கு எதுவும் செய்ய போவதில்லை. திரை அரங்கில் விசில் அடிப்பதற்கு பதில் பொது கூட்டதில் விசில் அடிக்கிறார்கள் அவ்வளவுதான். 




  
 

No comments: