திருமா மதுரைக்கு செல்வதற்கு முன்பே சிறுத்தைகள் இயக்கம் தொடங்கப்பட்டது என்பதும். அண்ணன் மலைச்சாமி தலித் பேந்தர்ஸ் ஆப் இந்தியா (டி பி ஐ ) எனும் கட்சியை தமிழகத்தில் தொடங்கினார் என்பதும். அவர் இறந்த பிறகு திருமா அதற்கு தலைமை பொறுப்பை ஏற்றதும். தமிழில் விடுதலை சிறுத்தைகள் என்று சொல்லிக்கொண்டாலும் அது நீண்ட நாள் தலித் பேந்தர்ஸ் ஆப் இந்தியாவாக (டி பி ஐ ) இயங்கியது என்பதும். டி பி ஐ என்பதை திருமா பின்னால் விடுதலை சிறுத்தைகள் கட்சி என்று மாற்றிகொண்டார் என்பதும் வரலாறு. டி பி ஐ என்பதும் விசிக என்பதும் கட்சிகள். சிறுத்தைகள் எனும் அடையாலம் தலித் மக்களின் அடையாளம் சிறுத்தைகள் இயக்கம் என்பது தலித் மக்களுக்கான இயக்கம் அது சூத்திர தமிழ் புலிகளிடம் பிச்சை எடுத்த பெற்றதல்ல. சிறுத்தைகள் என்பதற்கு முன்னால் தலித் என்பதை எடுத்துவிட்டு விடுதலை எனும் புலிகளின் இனிஷியலை போட்டு யார் பெத்த பிள்ளைக்கோ யாரையோ தகப்பனாக்குவது என்பதே எங்கள் கேள்வி? இது பச்சை பொய் மிகப்பெரிய வரலாற்று புரட்டு. திருமா சிறுத்தையவதர்க்கு முன்னரே பல ஆயிரம் தலித்துக்கள் தங்களை சிறுத்தைகள் என சொல்லிக்கொண்டார்கள் என்பதே வரலாறு. சென்னை சேரிகளில் "ஒடுக்கப்பட்ட சிறுத்தைகளே ஒன்று சேருங்கள்" என்று எண்பதுகளில் பிரசாரம் செய்யப்பட்டது என்பது சிறுத்தைகளின் வரலாறு. திருமாவை சிறுத்தை ஆக்கியது தலித் சிறுத்தைகள் இயக்கம். திருமா சிறுத்தைகள் இயக்கத்தை உருவாக்கவில்லை என்பதே வரலாறு.
No comments:
Post a Comment