புலிகள் கொள்ளையர்கள் கொலை காரர்கள் ஆயுத கடத்தல் தீவிர வாதிகள் ஜன நாயகத்துக்கு எதிராக செயல் பட்டவர்கள், தலித் மக்களை தலித் இயக்கத்தை ஒடுக்கியவர்கள் புத்தத்துக்கு எதிரானவர்கள் இன வெறியர்கள் பாசிஸ்டுகள் என்பது உலகத்துக்கே தெரியும். திருமா எனும் தனி மனிதருக்கு பிரபாகரன் மீதும் அவரின் புலி கூட்டத்தின் மீதும் அவர்களது கொள்கைகள் மீதும் ஆழ்ந்த நம்பிக்கையும் மரியாதையும் இருப்பது நமக்கு பிரச்சனை அல்ல அதை அவர் தனது தமிழ் தேசிய கட்சிக்கும் தனது தமிழ் தேசிய இயக்கத்துக்கும் அடிப்படை கொள்கையாக வைப்பதும் பிரச்சனை அல்ல ஆனால் அதை சேரி மக்களின் விடுதலைக்கான கொள்கை கோட்பாடு என்று சொல்லிக்கொல்வதில்தான் எங்களுக்கு பிரச்சனை. புலிகளின் இயக்கம் என்பது ஒடுக்கப்பட்ட மக்களின் இயக்கம் அல்ல அது ஆதிக்க வர்க்கங்களால் அதிகார வர்க்கங்களால் ஊட்டி வளர்க்கப்பட்ட ஒரு பாசிச இயக்கம். அது மொழி வெறி இன வெறி மத வெறி ஜாதி வெறி போன்ற சக்திகளால் இன்றளவும் ஆதரிக்கப்ட்டு வரும் ஒரு இயக்கம். அது எப்படி சேரி மக்களின் விடுதலைக்கான கொள்கை கோட்பாடு கருத்தாக அடிப்படை இயக்கமாக இருக்க முடியும் என்பதே எங்கள் கேள்வி. திருமாவளவன் எனும் தனி மனிதர் தவறு செய்யவில்லை அவர் செய்யும் இந்த தவறை பார்த்துக்கொண்டு கொட்டாவி விட்டுக்கொண்டு இருக்கும் பல தலித் அறிவிஜீவிகள் இந்த மாபெரும் வரலாற்று பிழைக்கு தெரிந்தே காரண கர்த்தாக்களாக இருக்கின்றனர். வருங்கால சாக்கிய சமூகம் திருமாவை தூற்றுகிறதோ இல்லையோ அவரோடு இருந்து அவரது இந்த வரலாற்று பிழைக்கு துதிபாடும் இந்த கொட்டாவி கோழைகளை தூ தூ தூ என தூற்றும்...........
No comments:
Post a Comment