பாலி மொழி எனது அன்னை மொழி ஆத்தா மொழி என்றெல்லாம் கப்சா விடலை
நான் பாலி மொழி மட்டுமே நல்ல மொழி. பாலி மொழி எனது அன்னை மொழி ஆத்தா மொழி என்றெல்லாம் சொல்லவில்லை. உங்களுக்கு தான் வரலாறே தேவை இல்லையே அப்புறம் என்ன கலபறையர் டமிலர் டம்ளர் அப்படின்னு கதை விடுறீங்க. கலபரையர் காலத்தை நல்லா தட்டி தட்டி பார்த்தோம். அவுங்க எங்கேயும் டமிலை வளர்த்ததா தெரியல. அப்படி அவுங்க வளர்த்த கதை இருந்தா சொல்லுங்க என்று தான் கேக்குறோம். ஆனா தாய் மொழி தாய் நாடு தாய் மதம்ன்னு செண்டிமெண்ட் பேசி உணர்சிகளை தூண்டி விட்டு உண்மையை அப்புடியே அமுக்க கூடாது. வாருங்கள் வரலாற்றை அலசுவோம். உங்களுக்கு வரலாறு பிடிக்கிலனா, இப்ப உள்ள நம்ம நிலையை மட்டும் பேசுவோம். அன்னை டமில் அத்தா டமில் ன்னு சொல்லிட்டு திரியும் அந்த டமில் நம்ம கிட்ட இருக்கா? நாம எப்ப டமில் எழுத படிக்க கத்துகிட்டோம். இன்னும் கூட என் மக்கள் சரியா எழுத படிக்க தெரியாமல் திரிஞ்சிட்டு இருக்கான். பாலி மட்டும் இல்லை எனக்க்கு ஒழுங்கா டமிலும் எழுத படிக்க தெரியாது. குறில் நெடில் இலக்கணம் இலக்கியம்னு இவுனுங்க படுத்தும் படு இருக்கே அப்பப்பா கொடுமைடா சாமி. அந்த ர இல்லை இந்த ற, இந்த லா இல்லை அந்த ளா. அப்புறம் ஒரு "ழா". இந்த "ழா" சனியத்தை எவன் கண்டு பிடிச்சான்னு தெரியல. முப்பதாயிரம் வறுஷமா அது இறுக்கம். ஆதாரம் லெமுரியா கண்டத்துல இறுக்கம். அந்த கண்டம் தண்ணிக்குள்ள இருக்காம். என்ன வரலாறு சாமி. கேட்டா நான் ஸ்லம் கிராக்கி எனக்கு டமில் அறிவு இல்லைன்னு பட்டம் கட்டுவான்.
ஆனா நீங்க கலபறையர் வளர்த்த மொழி காத்த மொழின்னு புருடா வுடுரீங்க. உங்களுக்கு தான் வரலாறு தேவை இல்லையே அப்புறம் என்ன தாய் மொழி வரலாறு பேசுறீங்க. தமிழ் அழிக்கப்படல ஒடுக்கப்பட்ல அது இன்னும் வாழ்ந்துட்டு தான் இருக்கு. ஆனா ஒரு காலத்தில் பல்கலைகழகத்தில் வளர்ந்த மொழி ஒரு சாம்ராட் அரசின் அரசு மொழி ஆசியா முழுக்க பேசப்பட்ட மொழி இன்று பேச்சு மொழியாக கூட இல்லை. அந்த மொழியின் மீது அந்த மொழி பேசிய மக்களின் மீது அவர்களின் கலச்சாரம் பண்பாட்டின் மீது தொடுக்கப்பட்ட ஒடுக்குமுறை எப்படி என்பதை பாருங்கள். மீண்டும் பாலி மொழி உயிர்பிக்குமா? பேச்சு மொழியாக மாறுமா? என்று எதிர்கால வரலாறு சொல்லும். இன்று உலகம் முழுக்க அதற்கான தேவை அதிகரித்து வருகிறது. வாழும் மொழிகள் செத்துக்கொண்டு இருக்கும் காலத்தில். மண்ணில் புதைக்கப்பட்ட ஒரு மொழி உயிர்பித்து வருகிறது. அம்மொழிக்கான தேவை மீண்டும் வருகிறது. அது எனது தாய் மொழி எனக்கு மட்டும் சொந்தம் என நான் அதை சிறுமை படுத்த விரும்பவில்லை. அது உலக உயிர்களுக்கு புத்தனின் மானுடத்தை கற்பிக்கும் மொழி. அதை காக்க கடந்த ஆயிரம் ஆண்டுகள் மக்கள் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை. மனிக்கவும். மறந்துட்டேன். உங்களுக்கு வரலாறு பிடிக்காது. "தமிழ்" "பாலி" தாய் மொழி காதல் மொழி என கப்சா விடாமல். இன்னைக்கு நம்ம மக்கள் இருக்கும் நிலைக்கு வாருங்கள். பாலி நமக்கு சோறு போடாது என்பது நிதர்சனம். அதுபோல "தமிழ்" ஆத்தா மொழி அப்பன் மொழி காதல் மொழி ன்னு கடுப்பு ஏத்தாமல். இன்னைக்கு நாம இருக்கும் நிலைமையை யோசித்து அதுக்கு மற்றம் வர வழிய பாருங்க. "தமிழ் எனக்கு பொண்டாட்டி" "இந்தியும் ஆங்கிலமும் எனக்கு கூத்தியான்னு" செண்டிமெண்டு பேச வேண்டாம். மொழிகள் எல்லாம் ஒரு ஊடக கருவிகளே அது நமக்கு பயன் பட வேண்டுமே ஒழிய அதை வைத்து நம்மை மற்றவர்கள் பயன் படுத்த கூடாது. //// நாம் எந்த இடத்தில் இருக்கிறோமோ அந்த இடத்தில் நம் நிலை என்னவென்று யோசிக்க வேண்டும்//// யோசிப்பதால் தான் எனக்கு மொழி உணர்வு மொழி வெறி இல்லை. பாலி தான் வாழனும் பாலிதான் பேசப்பட வேண்டும் என சொல்லவில்லை. அது எப்படி ஒடுக்கப்பட்டது என யோசிக்கிறேன். என் மூதாதையர் பேசிய அந்த மொழி எப்படி ஒடுக்கப்பட்டது என யோசிக்கிறேன். அந்த மொழியை கொஞ்சம் படிக்கும்போதே அது இன்னும் என் மக்களிடம் வாழ்ந்து கொண்டு இருக்கிறது என்று யோசிக்கிறேன். நான் சொல்லும் வரலாறு ஆண்ட பரம்பரையின் வரலாறு அல்ல. ஒடுக்கப்பட்ட மக்களின், கலாச்ச்சரட்டின் பண்பாட்டின் வரலாறு. வாழ்க்கைக்கு வரலாறு அவசியம். வரலாற்றில் நடந்த தவறுகள் மீண்டும் நடக்காமல் நிகழ்கால செயல்பாடுகளை நிர்ணயிக்க வரலாறு அவசியம். ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை திட்டம் வகுக்கும் போது கூட முன்னால் இருந்த திட்டங்களையும் அதில் இருந்த சிக்கல்கலையும் அறிந்தே திட்டம் இடுகின்றனர். எதிர்கால வரலாற்றை நிர்ணயிக்கும் பணியில் உள்ள எம் மக்கள் கடந்த கால வரலாற்றை ஆய்ந்து அதில் இருந்த சிக்கல்கள் மீண்டும் வராமல் பார்ப்பது கடமை. நீங்கள் வாழும் ஒரு ஆளுமை மொழியை தூக்கி பிடித்து பெருமை பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். நான் ஒடுக்கப்பட்ட உயிரோடு மண்ணில் புதைக்கப்பட்ட ஒரு மொழியின் வரலாற்றை தோண்டி எடுத்துக்கொண்டு இருக்கிறேன். பண்டதர் இந்த மொழியின் வரலாற்றை பேசாமல் விட்டு இருந்தால் அண்ணல் இந்த மொழியை உயிர்பிக்க ஒரு இலக்கண நூலை உருவாக்காமல் விட்டு இருந்தால் நானும் ஒரு டமில் தேசிய கூமுட்டையாக தாய் மொழி தகப்பன் மொழி அன்னை மொழி ஆத்தா மொழின்னு அந்த டமில் தேசிய சாக்கடையில் உருண்டு கொண்டு இருந்திருப்பேன். மதம் மொழி மனிதன் வாழ பயன்பட வேண்டும் அவற்றை செண்டிமெண்டாக்கி மனிதனை அரசியல் அடிமை ஆக்க பயன்படுத்தக்கூடாது. இது பாலிக்கும் புத்த தம்மதுக்கும் கூட பொருந்தும். பாலி மொழி இன்று ஆண்ட பரம்பரை ஆட்சி பீடத்தில் இருந்து கொண்டு மக்கள் மீது திணிக்கப்படும் மொழி அல்ல அதன் தேவையை உணர்ந்து மக்களே (அதுவும் ஒடுக்கப்பட்ட என் மக்கள்) அதை உயிர்பிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தினமும் பத்து நிமிடமாவது தம்மத்தை பாலி மொழியில் படித்து அதில் சொல்லப்பட்ட புத்தனின் கருத்துக்களை உள்வாங்கும் போது கிடைக்கும் மெய்ஞான பலன் என்ன என்பது அதை படித்து அதை உணர்பவர்களுக்கு தெரியும். நிகழ்கால சாக்கிய இயக்கம் என்பது வெறுமனே சோத்துக்கும் சாயாவுக்குமான இயக்கம் அல்ல. அது அதிகாரத்தை பெறுவதற்க்கான அல்லது செல்வ செழிப்பை அடைவதர்க்கான இயக்கம் அல்ல மாறாக மனித பண்புகளை மறு சீரமைப்பதர்க்கான இயக்கம். சாக்கிய மக்கள் பொருள் சார் உரிமைகளை மட்டும் இழக்கவில்லை அவர்கள் தங்கள் மெய்ஞான அறிவின் உரிமைகளையும் பல நூறு ஆண்டுகள் இழந்து உள்ளனர். சக்கியத்தை மீட்டு எடுப்பது என்பது ஏதோ ஆண்ட பரம்பரை வரலாறு பேசுவது என்பது அல்ல அது அம்மக்களின் இழந்த உரிமைகளை மீட்டு எடுப்பதற்க்கான ஒரு வரலாற்று குரல். "My words of advice to you are - Educate, Agitate, and Organize ..... Our battle is a battle not for wealth or for powr. It is a battle for freedom. It is a battle for the reclamation of the human personality." ~ Dr. B.R. Ambedkar.
No comments:
Post a Comment