தமிழ் நாட்டை தாண்டி யோசிங்க தமிழ் பத்திரிக்கை மட்டும் படிக்கதீங்க மத்த புத்தகங்களையும் படிங்க. இயக்கம் வேறு கட்சி வேறு. டி பி ஐ என்பது கட்சி தலித் சிறுத்தைகள் என்பது இயக்கம். தலித் சிறுத்தைகள் இயக்கம் ஏற்படுத்திய தாக்கம் இன்னும் உலகம் முழுக்க தலித் மக்களின் நெஞ்சில் காட்டு தீ போல பரவிக்கொண்டு இருக்கிறது. அந்த தீயில் இறந்து பிறந்த தீக்குஞ்சு தான் டி பி ஐ அதில் இருந்து வந்ததுதான் விடுதலை சிறுத்தைகள். உங்க அப்பாவை நிறைய பேருக்கு தெரியாது உங்களை நிறைய பேருக்கு தெரியும் ஆனா உங்க அப்பா இலைன்ன நீங்க இல்லை தம்பி. அதனால ஏறி வந்த ஏணிய எட்டி உதைக்க வேண்டாம். திருமா வல்லவரா? மலைசாமி வல்லவரா? என்பது நமது கேள்வி இல்லை. சிறுத்தைகள் இயக்கம் என்பது உங்களை போல எங்களை போல ஆயிரம் ஆயிரம் தலித் மக்களால் கட்டமைக்கப்பட்ட ஒன்று அது தலித் விடுதலைக்கான களம் அதை தமிழ் தேசியம் பேசி சூத்திர புலி கூட்டத்திடம் அடமானம் வைத்து விடாதீர்கள் என்றுதான் சொல்கிறோம். அது புலிகளிடம் இருந்து பெற்ற தீ பொறியால் உறவானது அல்ல அண்ணல் போட்ட விதையில் தோன்றி தலித் மக்களின் உழைப்பால் உருவான ஒரு இயக்கம் அதன் உண்மை வரலாற்றை மறைக்க முடியாது இன்னைக்கு நான் பேசலைன்னாலும் அதன் ஆணி வேறை தோண்ட நாளைக்கு ஒருவன் வருவான்.
No comments:
Post a Comment