தாத்தா மதமாற்றம் நமக்கு அவசியம் இல்லை என்று சொன்னார்
அண்ணல் 1935 இல் மதமாற்றம் செய்யுங்கள் என்று அறிவித்த போது, தாத்தா இரட்டைமலை சீனிவாசன் நாம் இந்துக்களே இல்லை மதமாற்றம் நமக்கு அவசியம் இல்லை என்று சொன்னார். அதை அவர் இந்து மதத்தின் மீது இருந்த பற்றால் சொல்லவில்லை, மாறாக நம் மக்களின் ஒற்றுமையை மதமாற்றம் சீர் குலைத்து விடும் என்ற ஆதங்கத்தில் சொன்னார். மதமாற்றம் என சொல்லி நம் மக்கள் பல மதங்களுக்கு சென்று விட்டால் நாம் சிதறடிக்கப்பட்டு பல மதங்களில் சிறு சிறு குழுக்களாக ஆகி விடுவோம் அது நமது ஒற்றுமையை குலைக்கும் என அறிவித்தார். இன்று அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது மதம் மாறியவுடன் நங்கள் பவுத்தர்கள் நாங்கள் கிறிஸ்துவர்கள் நாங்கள் இசுலாமியர்கள் என அவுங்களுக்கு எதோ உயர் பதவி கிடைத்து விட்டது போல நம்மில் இருந்து பலர் விலகி போய் கொண்டு இருக்கிறார்கள். அவர்களது சமூக அக்கறை அவர்கள் செய்ய வேண்டிய சமூக கடமையை அவர்கள் மறந்து விடுகின்றனர். அதே சமயம் தாத்தா சொன்னது போல வெறுமனே நாங்கள் இந்துக்கள் இல்லை என்று மட்டும் சொல்லிக்கொண்டு இருந்து இருந்தால் நமக்கு இந்து என்ற முத்திரை நீங்காமல் அந்த அசிங்கத்தை இன்னும் சுமந்து கொண்டு இருந்து இருப்போம். நமது பூர்வீக அடையாளத்தை வரலாற்றை உணராமல் போயிருந்து இருப்போம். 1956 இல் அண்ணல் செய்தது வெறும் மதமாற்றம் இல்லை அது பண்டிதர் அயோத்திதாசர் வழியில் நமது பூர்வீக சாக்கிய தம்மத்திற்கு திரும்ப செல்ல எடுத்துக்கொண்ட தம்ம பிரகடனம். இந்து என்று நம் மீது சுமத்தப்பட்ட இழிவை தூக்கி எறிந்த நிகழ்வு.

No comments:
Post a Comment