தமிழ் ஊடகங்கள் அண்ணன் செய்யுற தலித் செயல்பாடுகளை விளம்பர படுத்துவதில்லை. ஆனால் முக புத்தகத்தில் நம்ம சகோதரர் அகரன் வி சி கே என்ன பண்ணிட்டு இருக்கார். தினமும் அண்ணன் செய்யும் தமிழ் தேசிய சாதனைகளை தானே போட்டுட்டு இருக்கார். தாய் மண் என்ன பண்ணிட்டு இருக்கு அதுவும் அண்ணன் செய்யும் தமிழ் தேசிய சாதனைகளை தானே போட்டுட்டு இருக்கு. சீமானை விட வை கோவை விட அதிகமாக அண்ணன் தமிழ் தேசிய வாதி, தமிழர்களுக்காக ஈழ விடுதலைக்காக அவர்களை விட அதிகமாக அண்ணன்தான் சாதிக்கிறார் எனும் போட்டி அரசியல் தான் நடக்கிறதே ஒழிய மக்கள் விடுதலைக்காக எந்த செயல் பாடுகளும் இல்லை. நம்ம செயல் பாடுகள் ஜாதி இதுக்களை நம்மை நோக்கி சிந்திக்க வைக்க வேண்டும். நாம தான் அவர்கள் செயல் பாடுகளை நிர்ணயிக்க வேண்டும். இப்ப இங்க என்ன நடக்குதுன்னா வை கோ சீமான் கருணாநிதி என்ன அறிக்கை விடுராங்கன்னு பாத்துட்டு அதுக்கு நாம் ரெஸ்போன்ஸ் பண்ணிட்டு இருக்கோம். நம்ம கிட்ட ஒரு கூட்டம் இருக்கு அது உடனே களத்தில் இறங்குது. அடுத்தவங்க சவாரி செய்யவே இது நாள் வரை இந்த கூட்டம் பயன் படுத்தப்பட்டது. இந்த கூட்டம் அவர்களது விடுதலைக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே நமது ஆதங்கம். இனியாவது அது தனக்காக தனது விடுதலைக்காக செயல் பட வேனும்.
No comments:
Post a Comment