நாங்க தலித் இல்லை எங்க அரசியல் தலித் அரசியல் இல்லை. நாங்க பொது நீரோட்டதில் கலந்துட்டோம். நாங்க ஜாதி ஒழிப்பு டமில் டேசிய அரசியல் பண்ணிட்டு இருக்கோம். எங்க அடையாலம் தலித் இல்லை நாங்க டமிளர்கள் என்று அண்ணன் சொல்லிட்டு இருக்கார் அதுதான் நமக்கு பிரச்சனை. மற்ற பிரச்சனைகளை அணுக வேண்டாம் என்று சொல்லவில்லை, ஆனால் முழு நேரமும் தமிழ் தேசிய அரசியல் பண்ணிட்டு இருக்கார் அண்ணன் என்பதே எங்கள் குற்ற சாட்டு. தமிழ்மன் பத்திரிக்கையை திறந்தால் அது தலித் பத்திரிக்கை என்ற உணர்வே இல்லை. அது ஏதோ
ஜாதி இந்து தமிழ் தேசியம் பத்திரிக்கை அங்க கொஞ்சம் இங்க கொஞ்சம் தலித் பிரச்சனைகளை பற்றி பேசுவதுபோல் தான் உள்ளது. தலித் பிரச்சனைகளை திராவிட தமிழ் தேசிய கூடங்கள் கையில் எடுப்பதில்லை என்று அவர்களை கேள்வி கேட்டு கொண்டு இருந்த காலம் போய் தலித் கட்சிகள் (எனக்கு தெரியும் இப்படி சொன்னா அண்ணன் கோச்சிக்குவாறு) நம் பிரச்சனைகளை கையில் எடுப்பதில்லை என்று கேள்வி கேட்க வேண்டிய நிலைக்கு வந்து விட்டோம். ஒரு தமிழ்மண் இதழை எடுத்து அதை டில்லியில் உள்ள தலித் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அனுப்புங்கள் அங்கு தமிழ் தெரிந்த நம் சகோதரர் ஒருவர் உள்ளார். அவர் அதை ஆய்வு செய்யட்டும் அது எந்த அளவுக்கு தலித் பிரச்சனைகளை அணுகுகிறது எந்த அளவுக்கு டமில் டேசியம் ஈழம் பற்றி பேசுதுன்னு அவர் ஆராய்ச்சி செய்து அனுப்பட்டும். இன்னைக்கு சோசியல் ஆக்கவுன்டபிளிட்டி என்று ஜாதி இந்து கட்சிகளையும் இந்திய நடுவண் மற்றும் மாநில அரசுகளையும் அவர்களது செயல் பாடுகளில் எத்தனை சதவிகிதம் தலித் மக்களுக்கு உள்ளது என கேள்வி கேட்கிறோம். அதே கேள்வி இப்போது வி சி கே வுக்கும். இந்திய அரசும் மத்த கட்சிகளும் நமக்கு இருபத்து ஐந்து சதவிகிதம் செய்தால் போதும். நாம் இந்திய மக்கள் தொகையில்
இருபத்து ஐந்து சதவிகிதம் மட்டுமே உள்ளோம். ஆனால் வி சி கே நமக்கு தொன்னுத்து ஒம்பது சதவிகிதம் செய்ய வேண்டும். தாய் மண்ணில் நமக்கான செய்திகள்
தொன்னுத்து ஒம்பது சதவிகிதம் இருக்கவேண்டும். நாளை தொடங்க போகும் டி வி சேனலில் நம் விஷயங்கள்
தொன்னுத்து ஒம்பது சதவிகிதம் இருக்க வேனும ஏனெனில் விசிகே யில் இருப்பது
தொன்னுத்து ஒம்பது சதவிகிதம் நம் மக்கள் அங்கு செலவிடப்படும் பணம்
தொன்னுத்து ஒம்பது சதவிகிதம் நம் பணம்.
No comments:
Post a Comment