Monday, August 27, 2012

தமிழ் தேசியமும் தலித்தியமும் வெவேறான கருத்தியலை கொண்டவை.

தமிழ் தேசியம் என்பது ஆளும் அதிகார வர்க்கத்தினர் தங்கள் அதிகாரத்தை மற்றொரு அதிகார வர்க்கத்திடம் சமமாக பங்கிட்டு கொள்ள நடத்தும் போர். ஈழ தேசியவாதிகள் சிங்கள தேசியத்துக்கு எதிர்ப்பாக இந்திய தேசியவாதிகள் பிட்டிஷ் தேசியத்துக்கு எதிராக தமிழ் தேசியவாதிகள் இந்திய தேசியத்துக்கு எதிராக நடத்தும் அணைத்து தேசிய வாதங்களும் ஒரு ஆளும் வர்க்கத்தை வாழத்த மற்றொரு ஆளும் வர்க்கம் நடத்தும் போர். யார் யாருக்கு பட்டையம் கட்டுவது. யார் மக்களின் வரி பணத்தை மொத்தமா பங்கு போட்டு எடுத்துக்கொள்வது என்பதில் பாகபிரிவினை. இவர்கள் தேசிய விடுதலை போரில் சமத்துவம் சமூக நீதி என்பதெல்லாம் விடுதலை பெறட்டும் அப்புறம் பாத்துக்கலாம் என்பதே. இதை தான் காந்தியும் காங்கிரசும் சொன்னது. இதை தான் பிரபாகரனும் சீமானும் சொல்கிறார்கள். நம்ம அண்ணன் அதுக்கு ஜால்ரா போட்டுக்கொண்டு இருக்கிறார்.

தலித்தியம் என்பது தமிழ் தேசியத்துக்கு எதிரானது. அது  ஒடுக்கப்பட்ட மக்களால் நடத்தப்படும் விடுதலை  போர். இது தமிழ்  ஆண்டைகளின் தமிழ் அதிகார வர்கங்களின் அதிகார திமிரை எதிர்த்து நடத்தப்படும் போர். ஆண்டைகள் அதிகார வர்க்கங்கள் அடிமைகள் எனும் ஒடுக்கு முறை தமிழ் தேசிய கட்டமைப்புக்கு எதிராக நடத்தப்படும் போர். 

நம்ம ஜாதி ஒழிப்பு தமிழ் தேசியவாதிகள் நடத்தும் இரட்டை வேடங்கள்   இரவு முழுவதும் தமிழ் ஆண்டைகளுடன் நடத்தும் கேளிக்கை கூத்துக்கள்  காலையில் தலித் வேஷம் கட்டி உரிமைக்கு குரல் கொடுக்கிறோம் எனும் கூத்து பாட்டு. ஆண்டைகளிடமும் இவர்களுக்கு நல்ல பெயர் அடிமைகளிடமும் நல்ல பெயர்.
மன்னிக்கவும் அங்க ஆண்டைகளிடமும் இவர்களுக்கு கெட்ட பெயர் அடிமைகளிடமும் கெட்ட பெயர்.



No comments: