Saturday, August 18, 2012


////என்னுடைய நன்பன் ஒருத்தன் ஒருவரை அறிமுகம் செய்யும் பொழுது இவரும் DPI தான் என்றான்./// இதுக்கு அர்த்தம் என்னன்னா நீங்களும் உங்க தலைவரும் நாங்க தமிழ் தேசிய தலைவர்கள் எங்க கட்சி  தமிழ் தேசிய கட்சி என்று சொல்லிக்கொண்டாலும் அது பறையர்கள் கட்சி நீங்கள் எல்லோரும் பறையர்கள் என்பது நிதர்சன உண்மை. ஒரு பறையரை பார்த்து டி பி ஐ என்பதும். சிறுத்தை என்பதும் பள்ளரை பார்த்தி பி டி என்பதும். தலித்துக்களை பார்த்து பகுஜன் வாலா என்பதும் மிக சாதரணமாக ஜாதி இந்துக்கள் பயன்படுத்தும் பதங்கள். முப்பது நர்ப்பதுகளில் கம்யுனிஸ்டுகள் என்ராலே தமிழகத்தில் பறையர்கள் பள்ளர்கள் என்ற நிலை இருந்தது. அக்கட்சி பறையர் கட்சி பள்ளர் கட்சி என்று அழைக்கப்பட்டது. டி பி ஐ / வி சி கே பறையர் கட்சி தான். அதன் தலைவரும் அதில் உள்ள 99 சதவிகிதம் உறுப்பினர்கள் தொண்டர்கள் பறையர்கள் தான். அதனாலதான் நாங்களும் அதன் தலைவர் செயலை பார்த்து குமுறிக்கொண்டு இருக்கிறோம். பெரிய புராணத்தில் சாக்கிய நாயனார்னு ஒருத்தார் சிவனை கல்லை கொண்டு அடித்து வேண்டியதாக வரும். அவர் கல்லால் கடவுளை அடித்தாலும் அவர் உண்மையான சிவா பக்தரே என்று இறைவன் அவருக்கு அருள் புரிந்து ஏற்றுக்கொண்டதாக புராணம் சொல்லுகிறது. அவர் சிவனை கல்லால் அடிக்க கரணம் என்ன என்பதற்கு  பல காரணங்கள் சொல்லப்படுகிறது. அவர் சாக்கிய குலத்தில் பிறந்து பின்னர் சைவத்தை ஏற்றதால் ஏற்றதால் சாக்கியர்கள் அவரை ஒதுக்கியதாகவும். சாக்கியர்களுக்கு பயந்து அவர் சிவனை பூக்களால் பூஜை செய்வதற்கு பதில் கல்லால் பூஜை செய்தார் என்று சொல்லுவார்கள். அவர் கல்லால் பூஜை செய்யவில்லை சைவத்தை எதிர்த்த அவர் சிவன் கடவுள் அல்ல அவன் இருந்தால் என்னை தடுக்கட்டும் என கல்லால் அடித்தார், நந்தனை எப்படி அவர்கள் உள் வந்கிக்கொண்டர்களோ அது போல சாக்கிய நாயனாரையும் உள் வாங்கிகொன்டர்கள் என்றும் சொல்வர். அது போல அடுத்த கடவுளை கூட வணங்க மறுத்த  கொள்கை ரீதியில் மிகவும் வைராக்கியமும் கொண்ட சாக்கிய சமூகத்தில் பிறந்த மக்கள் இப்படி கும்மி அடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனரே என்று தான் நாங்களும் வருத்தப்படுகிறோம்.







No comments: