Monday, August 13, 2012


கொஞ்சம் பொறுமையா யோசிங்க. நான் இங்கு பேசுவது கம்யுநிசம் அல்ல. அதில் எனக்கு உடன்பாடும் இல்லை. சமத்துவம் மட்டும் பேசும் கம்யுநிசட்டில் தனிமனித உரிமைகள் பறிக்கப்படுகின்றன. உழைப்பவனும் உழைக்கதவனும். ஒண்ணா உக்காந்து ஒரே தட்டுல சாப்பிடனும்னு நான் சொல்லல. உழைக்காமல் மூதாதையர் திருடி சேர்த்து வச்ச ஏய்த்து  சேர்த்து வச்ச சொத்த உக்காந்து சாப்பிடும் சோம்பேறிகள் கிட்ட இருந்து அதை பிடுங்கி உழைப்பவர்களுக்கு கொடுக்கணும்னு சொல்றேன். ஆண்ட பரம்பரை என சொல்லிக்கொண்டு பரம்பரை பாரம்பரையாக  சொத்துக்களை அனுபவிக்காமல் தனி மனிதனின் திறமைக்கு ஏற்றார் போல அவர்கள் சொத்து சேர்த்து அனுபவிக்க சட்டம் இயற்ற வேண்டும். "சுதந்திரம்" வாங்கும் முன்னர் இந்த நிலம் வெள்ளைகாரனுக்கு சொந்தமாக இருந்ததாகவும் அவனிடம் இருந்து அதை இந்திய மக்கள் போராடி மீட்டதாக சொல்லும் இந்த புண்ணிய கொட்டிகள் அதை வெள்ளையரிடம் வங்கி சமமாக பங்கிடாமல். பெரும்பாலனா நிலங்களையும் சொத்துக்களையும் ஒரு சில ஆண்டைகளிடம் கொடுத்துவிட்டு அவர்கள் அதை பரம்பரை பாரம்ப ரையாக அனுபவிப்பதை நாங்கள் வேடிக்கை பார்க்க வைப்பதுதான் இந்த புண்ணாக்கு சுதந்திரம். டமில் டேசியம்  வந்தாலும் இந்த ஆண்ட புன்னாக்குகள் தான் ஆண்டைகளாக அனைத்து சொத்துக்களையும் அனுபவிக்கும். பரம்பரை சொத்து உரிமையை அழித்து தனது உழைப்பால் அறிவு திறமையால் உருவாக்கிய தனிமனித சொத்துரிமையை பாது காப்பது கம்யுநிசம் அல்ல. பரம்பரை சொத்துரிமையை தான் அழிக்க சொல்கிறோமே ஒழிய தனி மனித சொத்துக்களை அழிக்க சொல்லவில்லை. ஒவ்வொருவரும் அவர் வாழ்விற்கு தேவையான சொத்துக்களை சேர்த்து அனுபவிக்கலாம். அதை அவர்களது பிள்ளைகள் இருபத்து ஒரு வயது வரை அனுபவிக்கலாம். அதன் பிறகு அவர்களது பிள்ளைகள் சுயமாக உழைத்து பொருள் ஈட்டி அதை அனுபவிக்க வேண்டுமே ஒழிய பெத்தவங்க மூதாதையர் சம்பாதித்த சொத்தில் உக்காந்து ஏப்பம் விட கூடாது. அது போல கல்வி மற்றும் பயிர்ச்சி கூடங்கள் எல்லோருக்கும் பொதுவான தாக இருக்க வேண்டும். ஆண்டைகளின் பிள்ளைகளுக்கு ஒரு கல்வி ஒடுக்கப்பட்ட பிள்ளைகளுக்கு ஒரு வகையான கல்வி என இல்லாமல் சமத்துவ கல்வி அவசியம். அப்புறம் பாருங்க யார் திறமையானவங்க என்று.  

No comments: