ஜெய் பீம் என்பது நமது தாரக மந்திரம். நமக்கெல்லாம் உயிரையும் உடமையையும் அதற்க்கு மேல் சுயமரியாதையையும் தந்தது இந்த ஜெய்பீம் எனும் தாரக மாந்திரமே. என்பது ஆண்டுகளுக்கு முன்னர் நமது முன்னோர்கள் ஜெய் பீம் என்று பத்திரிக்கை நடத்தியதும் தனது இல்லங்களில் ஜெய் பீம் எனும் இந்த மந்திரத்தை பதித்து தங்களுடைய நன்றியை நமது ஒப்பற்ற தலைவனுக்கு காண்பித்ததும் நமது இயக்க வரலாறு. நாம் ஒருவரை ஒருர் சந்திக்கும் போது தொலை பேசியில் தொடர்பு கொள்ளும்போது ஜெய் பீம் என்று சொல்லி ஆரம்பிப்பதே நமது சாக்கிய மரபு. நாம் நமக்கான அடையாளங்களை கட்டமைப்பது நமது இயக்கத்துக்கு வலிமை சேர்க்கும். அண்ணலின் இந்த 56வது நினைவு நாளில் நமது சமூக உறவுகளுக்கு ஜெய் பீம் என்று சொல்லி உங்களது சமூக உணர்வை வெளிப்படுத்துங்கள். சமூக விடுதலை இயக்கத்துக்கு அடையாளங்களும் சின்னங்களும் மிகவும் அவசியம். இரண்டு இஸ்லாமியர்கள் சந்திக்கும்போது சலாம் மாலேக் என்கின்றனர் இரண்டு கம்யுனிஸ்டுகள் சந்திக்கும்போது லால் சலாம் என்கிறார்கள். அது போல இரண்டு சாக்கியர்கள் சந்திக்கும்போது ஜெய் பீம் என்று சொல்லுவது நமது மரபு. ஜெய் பீம் எனும் இந்த வாசகம் உலகம் முழுக்க உள்ள சாக்கியர்களை இணைக்கும் தாரக மந்திரம். நமது கொள்கையும் கருத்தியலும் அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டியது மிகவும் அவசியம். நமது அடையாளங்கள் தொடர்ந்து நமது எதிரிகளால் சிதைக்கப்பட்டு வருகின்றன. அப்படி சிதைக்கப்பட்ட ஒன்றுதான் இந்த ஜெய் பீம் எனும் மந்திரம். நமது உறவுககளை சந்திக்கும்போது தொடர்பு கொள்ளும்போது வீர வணக்கம் வெங்காய வணக்கம் என்று சொல்லுவதை விட்டு விட்டு ஜெய் பீம் என்று சொல்லுங்கள். ஜெய் பீம் நமது தாரக மந்திரம் நம்மை விடுவிக்கும் விடுதலை பறை.
No comments:
Post a Comment