கடவுள் பகவான் எனும் வார்த்தைகள் புத்தரை குறிக்க பயன் படுத்தப்பட்ட வார்த்தைகள். கடவுள் கட+உள் (உள்ளத்தை கடந்தவன்) என்று பொருள். ஆதியங்கடவுள் அருமறை பயந்தவன் போதியன்கிழவன் பகவான் புத்தர். ஆதி பகவன் புத்தனுக்கு கடவுள் வாழ்த்து பாடிய சாக்கிய நாயனார் திருவள்ளுவ சம்பவ பறையனார் எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்று பகவான் புத்தனின் வழியில் அறிவை போதித்தவர். புத்தரும் வள்ளுவ நாயனாரும் பண்டிதரும் அண்ணல் அம்பேத்கரும் உலகியற்றியான் (GOD / ஈசுவர்) உள்ளனா? இல்லையா? என்று தேடி நேரத்தை வீணாக்க வில்லை. இந்த உலகத்தில் உள்ள துன்பங்களுக்கு யார் காரணம் என்று தேடி விடை கண்டு பிடித்தனர். பசி பிணி நோய் சாக்காடு எனும் துன்பகளை தீர்க்கமுடியாத உலகியற்றியான் இருப்பான் எனில் அவன் இருந்தும் என்ன பயன் என்று அறிவு பூர்வமாக கேள்வி எழுப்பியவர்கள். உலகியற்றியான் உண்டு இல்லை எனும் நம்பிக்கைகளுக்கு அப்பாற்பட்ட அறிவு ஒளி பாதையே தம்மம்.
No comments:
Post a Comment