நாம் (சாக்கியர்கள்) ஒற்றை அடையாளத்துக்குள் வரும் காலம் வெகு தொலைவில் இல்லை. அப்படி வர வேண்டும் எனில் நமக்குள் இருக்கும் ஏற்றதாழ்வுகளை நீக்க வேண்டும். நான் உயர்ந்தவன் அடுத்தவன் தாழ்ந்தவன் எனும் ஜாதிய மனோ நிலை நம் மக்களிடமும் உள்ளது. அது மாறும் வரை சக்கிலியர், பள்ளர், பறையர் எனும் அடையாளங்கள் அவசியமே. அருந்ததிய மக்கள் தங்களுக்கு சேர வேண்டிய பங்கு கிடைக்கவில்லை என்று ஆதங்கப்படுகின்றனர். அவர்களுக்கான பங்கை தர வேண்டும் என்று சொல்வதே தம்மம். இட ஓதிக்கீட்டுக்காக கொடுக்கும் ஜாதி சான்றிதழால் நம் ஒற்றுமை குலைக்கப்படும் என்று நினைப்பது தவறு. பறையர்கள், ஆதி திராவிடர்கள், SC Converted to Buddhism என்று பல பெயர்களில் நமக்கு சான்றிதழ் கொடுக்கப்பட்டாலும் ஆழ் மனதில் நாம் பறையர் சாக்கியர் ஆதி திராவிடர் எனும் உணர்வுகள் கலந்து தான் இருக்கிறோம். அருந்ததியர்க்கு கொடுக்ப்படும் சம உரிமை என்பது பறையரையும் பள்ளரையும் சக்கிலியரையும் பிரிக்காது அது அரசியல், சமூகம், கலாச்சாரம், பண்பாட்டு தளங்களில் அவர்களை இணைக்கும். அருந்ததியர்களுக்கு அதிகமான பங்கை கொடுக்க சொல்லவில்லை. மக்கள் தொகையை கணக்கிட்டு அவர்களது உரிமைகளை கொடுங்கள் என்று சொல்வதுதான் தம்மம்.
No comments:
Post a Comment