Saturday, July 7, 2012


ஆண்டைகள் எல்லாம் இவர் பொன் விழா பிறந்த நாளைக்கு வருகிறார்களாம்.  இன்னா பெருமை  இன்னா சாதனை. அவுங்க எல்லாம் முற்றும் துறந்த முனிகளா ஞானிகளா எல்லாம் வல்ல கடவுள்களா? அயோக்கித்தனம் பண்ணி அடுத்தவன் வயித்துல அடிச்சு அவுங்க முப்பாட்டன்கள் சேத்து வச்ச சொத்துல உக்காந்து சாப்பிடும் அந்த சோம்பேறிகள் உங்கள் பொன் விழாவுக்கு வருவது சாதனையா? வேதனை சாமி. தலித் தலித்துன்னு சொல்லி எங்களோடு நேர்மையா இருந்தா அந்த ஆண்ட பரம்பரைகள் வந்திருக்காது தான். வாழ்க உங்கள் பொது தமிழ்  தொண்டு. ஐம்பது ஆண்டு சாதனை.  அப்படியே தமிழ் தேசியத்துக்கு மொத்தமா போயிட்டா நல்லா இருக்கும். நாங்க தலைய முழிகிட்டு எங்க வேலைய  பாப்போம். அடிக்கடி டபுள் வேஷம் கட்டுறது தான் எங்களுக்கு அதிக வேலைய கொடுக்குது. நாங்க அண்ணலின் தேரை  முன்னாடி ஒரு அடி இழுத்தா நீங்க பின்னாடி பத்து அடி இழுக்குறீங்க. எங்களை விட நீங்க பலசாலி தான் சாமி. வாழ்க உங்கள் ஜாதி ஒழிப்பு தமிழ் தேசியம். வாழ்க உங்கள் தமிழ் தேசிய ஆண்டைகள் "ஐயா" க்கள் "அண்ணன்" கள் . நல்லா குனிஞ்சி குனிஞ்சி கும்மி அடிங்க. 

No comments: