Wednesday, July 18, 2012

பாசிச புலி பயங்கர வாதிகளுக்கு பின்னால் இன வர்க்க ஜாதி மத வெறி சக்திகள்


இந்தியா எனும் பயங்கர வாத இந்துத்துவ தேசத்தால் ஊட்டி வளர்க்கப்பட்டதுதான் தமிழ் தேசியமும் புலி வாலும. உலகம் முழுக்க உள்ள இந்துத்துவ வாதிகளின் கோடிகளும் கோஷங்களும் தான் புலிகளை முப்பது ஆண்டுகள் வாழ வைத்தது. சிங்கள இன வாதத்துக்கு பவுத்த பேரின வாதம் எனும் முத்திரை குத்தி புத்தத்தை வீழ்த்தவும் அது இலங்கையில் மட்டும் அல்ல இந்தியாவிலும் பரவிடாமல் தடுக்கவும் இந்துத்துவம் போட்ட வேஷம் தான் புலி வேஷம் தமிழ் தேசம்.

இலங்கை இசுலாமியர்களை ஓட ஓட விரட்டியது, தலித் மக்களை புளியமரத்தில் கட்டி வைத்து  நொருக்கியதையும், மற்ற தமிழ் அமைப்புகளை ஒடுக்கியதையும், தொடர்ந்து புத்த மடாலயங்கள் மீது தாக்குதல் நடத்தியதையும் புலிகளின் தியாகம்  என்கிறீர்களா? இந்தியா முழுக்க இன்று புத்தமும் அம்பேத்கரியமும் தலித்தியம் பரவி வருகிறது. அங்கு கடந்த முப்பது வருடங்கள் அவை முளையிலே கில்லி கில்லி எறியப்பட்டது.இலங்கை மண்ணில் யார் தலித்தியத்தை கருவறுத்தது. தலித் மக்களிடையே ஏற்பட்ட இந்து மத எதிர்ப்பையும் புத்த தம்மை ஏற்பையும் தடுத்தது யார்.  இந்த தமிழ் தேசிய புலிகள் தானே. அது என்ன தொடர்ந்து புத்தரின் பற்  கோயிலிலேயே புலிகள் தாக்குதல் நடத்தினார்கள். இலங்கை வரலாறு சொல்லுது. அந்த நாட்டை ஆளும் மன்னனின் முக்கிய கடமை அந்த பற்  கோயிலை காப்பது.  அது அழிக்கப்பட்டால் புத்தம் அழிக்கப்படும் என்பது இந்துத்துவத்தின் நம்பிக்கை. அந்த கோயிலில் தான் புத்த தம்ம நூல்கள் எல்லாம் ஆயிரம் ஆண்டு காலம் காக்கப்பட்டு வந்தது. புலிகள் மாட்டும் அல்ல அதற்கு முன்னர் ஆண்ட இந்து மன்னர்கள் எல்லாம் தாக்கியது இந்த கோயிலை தான். 


இந்த புலி பயங்கர வாதிகள் இலங்கை அரசுக்கு எதிராக அதை விட சக்தி வாய்ந்த ஆட்சி அதிகாரத்தை வன்னி கட்டில் நடத்தி வந்தனர். அவர்கள் என்ன ஜன நாயக முறையில் ஒட்டு போட்டு தேர்தல் நடத்தி ஆட்சி நடத்தினார்களா? இல்லை சட்டம் எழுதி சமத்துவ முறையில் ஆட்சி நடத்தினர்களா? சர்வதிகார ஆட்சிதானே அங்கு நடந்தது. இதற்கு இடையில் இலங்கை இந்திய  அரசுகள்  எத்தனையோ கட்சிகளிடம் கைமாறியது,. எத்தனையோ தலைமைகள் மாறிவிட்டன. ஆனால் இந்த முப்பது ஆண்டுகளும் ஒரே ஆள் ஒரே இயக்கம் என மக்களை தன பிடியில் வைத்து இருந்தது இந்த புலி பயங்கர வாதம். 


அது என்ன தியாகமா அப்படி என்ன தியாகம் அஞ்சு காசுக்கும் பத்து காசுக்கும் கை ஏந்தி பிச்சை எடுத்து சோத்துக்கு வழி  இல்லாமல் இருக்கும்  சாதாரண ஏழை எளிய மக்களின் இயக்கமா அது. புலி இயக்கம் உலக வல்லருசுகளின் கை பாவையாக உலக பண முதலைகளின், உலக நாடுகளில் உள்ள ஆயுத கடத்தல் கும்பல்களின் உதவியுடன் நடத்தப்பட்ட ஒரு பயங்கர வாத பேரியக்கம். அதில் பாவப்பட்ட ஜென்மங்கள் அந்த இயக்கத்தில் அடி மட்டத்தில் வேலை செய்த புலிகள். கஞ்சிக்கு வழி இல்லாமல் புலிகளின் மிரட்டலுக்கு பயந்து பச்சை குழந்தைகளை இந்த பயங்கர வாதிகளுக்கு கொள்ளை கொடுத்த்த தாயும் தகப்பனும் பாவப்பட்ட ஜென்மங்கள். உலகிலே அதிகமான குழந்தை வன்முறையாளர்களை கொண்ட ஒரு இயக்கம் புலி இயக்கம். 


இந்திய அரசு இயந்திரத்தை பயன் படுத்தி இந்திய ஊழல் அரசியல் பெருச்சாளிகள் நடத்திய ஆயுத பேர  உழல்கள்  கள்ள கடத்தல் வேலைகள் மூலம் இந்திய மண்ணில் இறக்குமதி செய்யப்பட்ட  பெரும்பான்மையான ஈராணுவ தளவாடங்கள் புலிகளின் கைக்கு சென்றது. பெரிய பெரிய கப்பல்களில் தளவாடங்களை இறக்கி இந்திய கடல் மற்றும் நிலம் வழியாகவே ஆயுதங்கள் இலக்கைக்கு கடத்தைப்பட்டன. புலிகள் வைத்து இருந்த ஆயுதங்கள்  இலங்கை அரசிடம் கூட இல்லை. இப்படி இந்திய சட்டம், இலங்கை சட்டம், அகில உலக சட்டம் எல்லாவற்றுக்கும் ஆப்பு வைத்து விட்டு அந்த சட்டங்களை தங்களது நலனுக்காக பயன்படுத்தும் ஆதிக்க சக்திகளின் துனையோடு வளர்ந்தது தான் புலி இயக்கம். 


உலகத்திலே கொள்கை கோட்பாடு என எதுவும் இல்லாமல் பணபலத்தையும் அதிகாரத்தையும் மக்களின் உணர்சிகளையும் மட்டுமே முதலீட்டாக்கி வளர்ந்த ஒரு இயக்கம் தான் இந்த புலி இயக்கம். எப்படியோ யாரால் வளர்க்கப்ட்டார்களோ, யாருக்காக வளர்ந்தார்களோ அவர்களே அதை அழித்தார்கள் என்பது தான் புலி இயக்க வரலாறு. 


இந்த புலி பயங்கர வாதிகளுக்கு பின்னால் மிகப்பெரிய இன வர்க்க ஜாதிய மத வெறி சக்திகள் இருப்பதை அறியாமல் நிறைய கூமுட்டைகள் கண் மூடித்தனமாக அதை ஆதரித்து வருகின்றனர்.  



No comments: