Wednesday, July 18, 2012

பறையர் பள்ளர் சக்கிலியர் மற்றும் அனைத்து தலித் சமூக மக்களும் தம்மத்தின் பாது காவலர்களாக இருந்த சாக்கிய மக்களின் வம்சா வழியினரே . அவர்கள் மீது தொடர்ந்து சுமத்தப்பட்டு வந்துள்ள ஒடுக்கு முறையை ஏற்று தங்களை தாங்களே இழிவாக நினைக்கும் மனோ நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். தன்னை பறையன் என சொல்லும்போது தான் சக்கிளியரை விட உயர்ந்தவன் என ஒருவன் நினைக்கும்போதே அவன் அவனுக்கு மேலே ஆதிக்க ஜாதிகள் உட்கார்ந்து உள்ளதை ஏற்று கொள்கிறான் என்று அர்த்தம். ஒருவன் தன்னை பறையன் என அடையாளப்படுத்தி விடுதலை உணர்வை முன் வைக்கும்போது சக்கிலிய மக்கள் தனிமை படுத்தப்படுவதில்லை. தாத்தா இரட்டை மலை சீனிவாசன் தன்னை பறையன் என அடையலப்படுத்தியபோது அது அனைத்து சாக்கிய மக்களையும் ஒருங்கிணைக்கும் ஒரு மாபெரும் விடுதலை குரலாகவே அது இருந்தது. நான் பறையன் அல்ல ஜாதிக்கு அப்பார்ப்பட்டவன் என சுய அடையாளத்தை மறைத்து தமிழ் திராவிடம் என ஓடி ஒளியும் வரை இந்த சமூகம் விடிவு அடையாது. தன்னை தான் உணர்வது தான் மெய் ஞானம். தன்னை யார் என உணராமல் தமிழ் திராவிட மாயையில் இருந்து விலகாமல் இருக்கும் வரை மெய் ஞானம் என்பது ஒரு மாயமே.

"நான்! நான்!  என்ற மகா மந்திரத்தை சொல்லிக் கொண்டிருப்பவன் தன்னை உணர்ந்து சகலமும் அறியும் ஞானியாகி தலைவனைக் காண்பதுபோல் நான்! நான்! என்று எவன் ஒருவன் தன்னையும் தன் இனத்தையும் மறுக்காமல் அச்சமும் நாணமும் இல்லாமல் உண்மை பேசித் தன் சுதந்திரத்தைப் பாராட்டுகின்றானோ அவன் மதிக்கப்பெற்று இல்வாழ்க்கையில் இன்பமுள்ளவனாய், நித்திய சமாதானத்துடன் வாழ்வானாகையால் ‘பறையர்’ இனத்தாருக்கு ‘பறையன்’ என்பவன் ‘நான் தான்’ என்று முன் வந்தாலொழிய அவன் சுதந்திரம் பாராட்ட முடியாமல் தாழ்த்தப்பட்டு என்றும் தரித்திரனாய் இருப்பான்."  - தாத்தா திவான்பகதூர் இரட்டைமலை சீனிவாசன் 1859 - 1945- ஜீவிய சரித்திரச் சுருக்கம் - பக். 8.

Dalit Sakya Dalit Sakya Dalit Sakya

No comments: