அடிமைகள் கூட மகிழ்சியா இருக்கணும் உடல் நலமுடன் இருக்கணும் என்பது ஆண்டைகளின் விருப்பம். ஆனால், தலித் மக்கள் அப்படி அடிமையாக இருக்க தயாராக இருந்தால் கூட இப்படி சிரிக்க முடியாது. ஊர் தெருவை தாண்டி போகும் ஒவ்வொரு தலித் சிறுவர்களின் மன நிலையும் அதை அனுபவித்தவர்களுக்கு தெரியும். இன்னைக்கும் தமிழக கிராமங்களில் இதுதான் நிலை. இப்படி ஒரு மகிழ்ச்சி கிடைக்கும் எனில் நான் ஜாதி தமிழர்களுக்கு காலம் எல்லாம் அடிமையாக இருக்க தயார். ஆனால் அது இங்கு கிடைக்காது. என் கிராமத்தை விட்டு சேரியை விட்டு நகரத்தை விட்டு நாட்டை விட்டு போகும் நிலையில் என் மக்கள் உள்ளனர். சேரியில் பிறந்த தலித்தின் வலி அடிமைகளுக்கு கூட கிடையாது அது என்ன என்று அவர்களுக்கு தான் தெரியாது. எத்தனையோ தமிழர்கள் சிங்களர் பகுதிகளில் குடியேறி வாழ்ந்து வருகிறார்கள். இவ்வளவு பெரிய தமிழ் நாட்டில் எந்த கிராமத்திலாவது ஊர் தெருவில் தலித் குடியேறி உள்ளனரா? அப்படி குடியேற நீங்கள் விட்டு விடுவீர்களா? சமமாக இல்லை அடிமையாக கூட குடியேற முடியாது. தலித் மக்களின் வழியும் அவர்களின் நிலையும் எந்த ஒரு ஒடுக்கு முறையுடனும் பொருத்தி பார்க்க முடியாது.
No comments:
Post a Comment