Friday, July 6, 2012

நீங்க இன்னும் இந்து மதத்தை சீர் திருத்தும் வேளையில் இருக்கிறீர்களா?

இல்லை அதில் இருந்து வெளியே வந்து விட்டீர்களா?  நீங்கள் எடுத்து சொல்லும்  ஜாதி ஒழிப்பு எனும் நூல் இந்துக்களுக்காக அண்ணல் அம்பேத்கர் எழுதியது. அது அவர்கள் படித்து அவர்களை திருத்தி கொண்டால்; அவர்கள் மதத்தை சீர்திருத்தினால் அந்த மதம் வாழும்  இல்லையேல் அது வீழும் என்று சொன்னார் பாபாசாஹேப். அதே புத்தகத்தில். நான் இந்த சீர்திருத்த  வேலையை செய்ய இங்கு இருக்க மாட்டேன் இது உங்கள் வேலை என்றும் சொல்லி விட்டார். ஆனால் நீங்கள் அதை உங்கள் வேத புத்தகமாக வைத்து இருப்பது ஆச்சரியம். அது இந்து மதத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள  அரவிந்தன் போன்றவர்களுக்கு பயன் அளிக்கும். நீங்கள் அம்பேத்கர்வாதி எனில், இந்நேரம் புத்த தம்மத்தை ஏற்று இருக்க வேண்டும். அப்படியெனில்,  புத்தரும் அவர் தம்மமும் புத்தகம் படித்திருக்க வேண்டும். அதில் கருண-மெத்தா, எதிரிகளிடத்தில் கூட அன்பு காட்ட வேண்டும் என்று அவர்  எழுதுகிறார். அப்படி எனில் அரவிந்தன் எனும்  ஹிந்துத்துவவாதி நமக்கு எதிரி எனில் அவரிடமும் அன்பு காட்டுவோம் நட்பு பாராட்டுவோம். தம்மத்தின் வலிமை தெரியாதவர்கள் தான்
ஹிந்துத்துவத்தின் வலிமை கண்டு அஞ்சுவர்.  உங்களுக்கு தம்மத்தின் வலிமை இன்னும் தெரியவில்லை... ஒரு பெரியார்வாதி , கம்யுனுஸ்ட்டு, கிறிஸ்துவர், இசுலாமியர் நண்பராக இருக்கும்போது ஒரு ஹிந்துத்வாதி நண்பராக இருக்க கூடாதா? எனக்கு அவர் மீது பயம் இல்லை, ஹிந்துத்வா என்னை ஆடகொள்ளாது மாறாக தம்மம் அரவிந்தன் நீலகண்டனை ஆட்கொள்ளும் எனும் நம்பிக்க (confidance, not faith) எனக்கு உள்ளது.


          SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT

No comments: