புத்தரும் அண்ணலும் நாத்தீகர்களா?
~~“Brahma Sahampati left the Brahma world and appeared before the Buddha. And arranging his upper robe on one shoulder, he bent down and with clasped hands.” By. Dr. B. R. Ambedkar in Buddha and His Dhamma .~
இதை உங்கள் நாத்தீகம் ஏற்றுக்கொள்ளுமா? அல்லது இதை பாபாசாஹேப் எழதவில்லை என சொல்லுமா? அல்லது அவர் பிரம்ம லோகத்தை சொல்லவில்லை பக்கத்தில் இருக்கும் பர்மாவை தான் சொல்கிறார் என சொல்லுமா? அல்லது இந்த கருத்து பகுத்தறிவுக்கு ஒவ்வாதது என தூக்கி போடுமா?
பாபாசாஹேப் இந்து கடவுள்களான பிரம்மா போன்றவர்களை நாம் வழி பட தேவை இல்லை என்று சொன்னது உண்மைதான். ஆனால் பிரம்மா என்பவர் நமது பகவன் ஆதியங் கடவுள் (இங்கு நான் படைப்பு கடவுளை சொல்லவில்லை) புத்தனை வந்து வணங்கி தம்மத்தை மக்களுக்கு போதியுங்கள் என வேண்டி நின்றதாக பாபாசாஹேப் எழுதுகிறார். இந்த பிரம்மா இந்து கடவுளா இல்லை புத்த தம்ம இலக்கியங்களில் சொல்லப்பட்ட வேறு பிரம்மாவா?
புத்தரும் தம்மமும் என்பது அவர் பல ஆண்டுகள் ஆராய்ந்து எழுதியது. சில விஷயங்கள் உங்கள் அறிவுக்கு எட்டவில்லை எனில் அது பகுத்தறிவு இல்லை என்பது முட்டாள் தனம்.
புத்தரும் அவர் தம்மமும் எனும் நூலில் படைப்புக்கடவுளை அந்த கடவுளுக்கான காரணத்தை மறுக்கிறார். ஆனால் அதே நூலில் மறு பிறப்பு, கம்மா (வினை), போதிசத்துவரின் பத்து பிறப்புகள், தேவர்கள் (devas), டெவன்லி லைட் (devinly light) பற்றியெல்லாம் பேசுகிறார். அவை எல்லாம் உண்டா? இல்லையா? என்பது கேள்விகள். கேள்விகள் கேட்காமல் அவற்றை ஏற்றுக்கொள்ளுங்கள் என சொல்லவில்லை. ஆனால் அவை எல்லாம் இல்லவே இல்லை என்பதே நாத்தீகம். அவை எல்லாம் உண்டு என நம்ப சொல்லவில்லை. அவற்றை எல்லாம் பேசியுள்ள புத்தரும் அண்ணலும் நாத்தீகர்களா?
புத்தரும் அண்ணலும் தங்களை எங்காவது நாத்தீகர்கள் என சொல்லிக்கொண்டார்களா? சாவதற்கு முன்னால் வரை அவர் நாத்தீகர் இல்லை சாவதற்கு ஒரு நிமிடத்திற்கு முன்னர் அவர் தன்னை கடவுள் மறுப்பாளர் என சொன்னார் அதனால் அவர் நாத்தீகர் என சொல்கிறீர்களா? படைப்புக்கடவுள் (ஈஸ்வர்) என்பதை மையப்படுத்தி பேசுவது தம்மம் இல்லை என்பது அண்ணலின் கருத்து. அதே சமையம் மனிதர் அல்லாத தேவதைகள், பிரும்மர்கள், சக்கர தேவர், பிரும்ம லோகம் என்பவை பற்றியெல்லாம் அவர் தமது நூலில் பேசுகிறார். உங்கள் நாத்தீக பகுத்தறிவுக்கு அவை புரியவில்லை என்றால் நாங்கள் என்ன சொல்லுவது.
தம்மம் என்பது மதம் இல்லை என்பது உண்மை தான். ஆனால் புத்திசம் என்பது தம்மத்தை அடிப்படையாக வைத்து உருவான ஒரு மதம். அது மற்ற மதத்தினருக்கு அவர்கள் மதம் செய்யும் சமூக கடமைகளை அது புத்திஸ்டுகளுக்கு செய்கிறது.
அண்ணல் மதமறுப்பாளர் அல்ல அவர் மனிதனுக்கு மதம் அவசியம் என்கிறார். மதம் ஒரு போதை மூட நம்பிக்கை என்று சொல்லும் மத மறுப்பாளர்களுக்கு அவர் சவால் விடுகிறார். புத்த தம்மத்தை அடிப்படியாக கொண்டு உருவான புத்திசத்தை அறியாதவர்கள் அப்படி சொல்கிறார்கள் என்கிறார். அவர் தன்னை மத மறுப்பாளர் என எப்போதாவது சொன்னாரா?
உங்கள் ராமசமியிசம் வேறு அண்ணலின் அம்பேத்கரிசம் வேறு இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ளதீர்கள்.
நீங்கள் உண்மையில் பவுத்தர் எனில் முதலில் மக்களை புத்தத்தை ஏற்க பிரச்சாரம் செய்யுங்கள் அதை விடுத்து அது நாத்தீகம் அது இந்து மதத்தின் ஒரு அங்கம் என ஹிந்துத்துவ வாதிகள் செய்யும் பிரச்சாரத்தை அப்படியே எங்களிடம் ஒப்பிக்காதீர்கள்.
புத்திசம் என்பது ஒரு மதம், அது இந்து மதத்திலிருந்து வேறு பட்ட மதம் அதை அண்ணல் மிக தெளிவாக பிரகடன படுத்தியுள்ளார். இன்று சாக்கிய (தலித்) மக்களின் மீது இந்து அடையலாம் சுமத்தப்பட்டுள்ளது உண்மைதான். அதை உடைப்பதே தம்ம தீக்ஷா பிரகடனம். தம்மத்தை ஏற்கும் ஒவ்வொருவரும் தான் சாகும் முன் குறைந்தது ஒருவரையாவது தம்மம் ஏற்க வைக்க வேண்டும். சாக்கியனாக பிறந்த ஒவ்வொருவரும் இதை உணரும் காலம் வரும் அப்போது அவர்கள் அனைவரும் தங்களை புத்த தம்மிகள் என பிரகடன படுத்துவார்கள். அதற்க்கான வேலைகள் நடக்கிறது.
நாத்தீகம் பேசி நேரத்தை வீணாக்காமல், தம்மம் பரப்பும் வேலையை செய்யுங்கள். தம்மம் வந்தால் உண்மையான பகுத்தறிவு தானாக பரவும்.
SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT SAKYA DALIT
.

No comments:
Post a Comment