//“இன்று இல்லாவிட்டாலும் நாளை தலித்துகள் ஆயுதம் ஏந்துவார்கள்- தொல்.திருமாவளவன்./// ஆமாம் ஏந்துவார்கள். ஏந்திட்டு ஜெயிலுக்கு போவார்கள். அப்பா சாமி எங்க கூட்டம் கள்ள கடத்தல் செய்யும் கொள்ளைக்கார கும்பலும் இல்லை. கொள்ளை கூட்டத்தோடு தொடர்பு உடைய கும்பலும் இல்லை. அதையெல்லாம் ஆண்ட பரம்பரை தமிழர் கூட்டம் செய்யும். அவர்களுக்கு ஆயுதம் சப்ளை செய்ய உலகம் முழுக்க ஆதிக்க வர்க்க ஆண்ட பரம்பரை பணக்கார கும்பல் இருந்தது இன்னும் இருக்கிறது. அவுங்களுக்கு ஆயுத பயிற்சி தர இந்துத்துவ பேரின வாத அரசு இருந்து. எங்க மக்கள் அன்னாடங்காச்சிகள் ஒரு சின்ன பிஸ்டல் கூட வாங்க முடியாது. அதை வாங்க கூட ஜாதி இந்து மாவோயிஸ்டுகள் கிட்ட தான் போகணும். இப்புடி எல்லாம் எங்களை தூண்டி இருக்கிற கோமணத்தையும் அவிழ்க்க வேண்டாம். இப்பதான் எங்க மக்க படிச்சி ஒரு வேலைய தேடிக்கினு சேரிய வுட்டுட்டு வெளியே வந்துக்குனு இருக்காங்க. இத விட கொடுமையான காலத்தில் எம் மக்கள் வாழ்ந்த பொழுது கூட தாத்தாவும், பண்டிதரும், அண்ணலும் எம் மக்களுக்கு இப்படி ஒரு கொலை வெறியை கற்பிக்க வில்லை. நீங்க உங்க தமிழ் தேசிய தலிவரு கிட்ட கத்து கிட்ட ஆயுத போராட்டம் எல்லாம் உங்க கிட்டேயே வச்சுக்குங்க. அது எல்லாம் எங்களுக்கு வேண்டாம். ஒன்னு பண்ணுங்க முதல்ல நீங்க ஆயுதம் ஏந்தி வை கோ, நெடுமாறன், கருணாநிதி, ராமதாஸ் இவுங்கள எல்லாம் போட்டு தள்ளுங்களேன். அப்புறமா எங்கள ஆயுதம் எடுக்க சொல்லுங்க. அத உட்டுட்டு நீங்க படிப்பேங்க முதுகலை பட்டம் வாங்குவீங்க, அரசு ஊழியம் பண்ணுவீங்க இப்ப எம் பீ யா இருப்பீங்க, நாங்க ஆயுதம் ஏந்திட்டு ஜெயிலுக்கு போகனுமா. என்ன சாமி உங்க லாஜிக்.
No comments:
Post a Comment