Wednesday, September 19, 2012

புதுசா பூணூல் போட்ட நாமம் போட்ட பட்டை போட்ட ஒரு சில பன்றிகள்

புதுசா பூணூல் போட்ட நாமம் போட்ட பட்டை போட்ட ஒரு சில பன்றிகள் நாங்க உசந்த சாதி சக்கிளியர் நமக்கு கீழன்னு மனுதர்மம் பேசுவதும். புதுசா பணம் பாத்துட்டு சூத்திர பண்ணைகள் போலவும் பார்ப்பன முதலாளிகள் போல சக்கிலிய மக்களை தங்களுக்கு அடியாட்கள் போல நடத்துவதும் பறையர் சமூகம் புதிதாக பார்க்கும் ஒரு அவலம். இதை நாம் முற்றிலும் எதிக்கிறோம். இந்த ஓரு சில பன்றிகள் செய்யும் இந்த தவறுக்காக எல்லா பறையர்களையும் மனு வாதிகள் சூத்திர பண்ணைகள் என பேசி திரிகின்றன சில சூத்திர ஜால்ரா கூட்டங்கள். பறையர்களின் வாழ்வியலை ஆராய்ந்த மேற்கத்திய அறிஞர்கள் எல்லாம் இன்றும் அம்மக்களிடம் சமத்துவ சமதர்மமும் கருணையும் அன்பும் அநீதிக்கெதிரான புரட்சி மற்றும் போராட்ட குணமும் இருப்பதை மிக தெளிவாக தங்கள் நூல்களில் பதிந்து உள்ளனர். அண்மையில் அட்டகத்தி படத்தில்  கூட இந்த மென்மையான வாழ்வியலையே படமாக்கி உள்ளனர். இன்றும் அண்ணலின் கருத்துக்களை பண்டிதரின் கருத்துக்களை ஏற்று புத்த தம்மத்தின் வழியில் பஞ்ஞ சீலத்தை கடை பிடிக்கும் சமூகமாக மாறி வருகிறது பறையர் சமூகமே. இந்த சமூகத்தில் ஒரு சில மக்கள் செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுவது விமற்சிப்பது தவறு இல்லை. அது தேவையும் கூட. ஆனால் ஜாதியத்தையும் வருணத்தையும் எதிர்த்த இம்மக்களை ஜாதியாக்கி அம்மக்களை மனு வாதிகளாக ஆக்கி கொச்சை படுத்துவது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய விஷயம். ஜாதியை எதிர்த்தவர்கள்  வருணத்தை எதிர்தவர்கள் மத சடங்கு சம்பிரதாயங்களை எதிர்த்து களமாடிய களபறையர்கள் ஜாதி வருண சடங்கு சம்பிரதயங்களுக்கு அப்பாற்பட்டவர்கள்.  அவர்களை சமூகமாக மதிக்க கற்றுக்கொளுங்கள். நீயும் நானும் ஒண்ணுன்னா என்னை நீ மதிக்கணும் உன்னை நான் மதிக்கணும்.

நாங்கள் எம் மக்களை ஒருங்கிணைப்பது எம் மக்களின் விடுதலைக்காக. எங்கள் அடையாள அரசியல் என்பது பள்ளர் அல்லது அருந்ததியர் சமூக மக்களுக்கு எதிரானது அல்ல. எப்போதும் தலித் எனும் ஒற்றை அடையாளத்தில் இணைந்து செயல்பட நாங்கள் தயங்கியதும்  இல்லை.  அதுக்காக எம் இன சகோதர சகோதரிகள் பறையர் அடையாளத்தை போடக்கூடாது பறையர்களின் உரிமைகளுக்கு குரல் கொடுக்ககூடாது என இந்த ராமசாமி ஜால்ரா கூட்டம் கத்துவது மிகவும் சிறு பிள்ளை தனமாக உள்ளது. தலித் எனும் ஒற்றை அடையலாம் பறையர்  மக்களின் உரிமைகளை மறுக்கிறது எனும்போது அதற்காக குரல் கொடுப்பதும் எங்கள் கடமை. சமூக கலப்பு ஏற்பட வேண்டும் எனில் சமூகத்தில் உள்ள ஏற்ற தாழ்வுகள் ஒழிக்கப்பட வேண்டும் சமூக ஏற்ற தாழ்வுகள் ஒழிக்கப்பட வேண்டும் எனில் ஒவ்வொரு சமூகமும் தங்கள் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு பணியாற்ற வேண்டும். வெறுமனே திராவிட  தமிழ் தேசிய ஜாதி ஒழிப்பு ஜால்ரா கோஷம் போட்டால் பத்தாது. அண்ணல் அம்பேத்கர் ஒட்டு மொத்த ஒடுக்க பட்ட மக்களுக்காக போராடியது உண்மை. அதே சமையம் அவர் தான் பிறந்த மஹார் சமூகத்தை எப்போதுமே கை விட வில்லை. அதே போல கடைசி வரை அவரது இயக்கத்தை கட்டி காத்தவர்கள்  மஹார்  சமூக மக்களே. இன்றும் அண்ணலை உலக அரங்கில் தூக்கி பிடிப்பவர்கள் மஹார் சமூக மக்களே. அவர் தம்மம் தழுவும் முன் கூட  மஹார்   மக்களோடு கலந்து பேசிய  பின்னரே தனது முடிவை அறிவித்தார். இது போல மற்ற சமூக மக்களும் தங்கள் சமூக மக்களோடு பேசி முடிவெடுக்கும்படி கேட்டுக்கொண்டார். ஒவ்வொரு சமூகமும் தங்கள் சமூக விடுதலைக்காக முன்னேற்றத்திற்காக செயல் படுவது தப்பு இல்லை. அடுத்த சமூகத்துக்கு எதிராக செயல் படுவதே தவறு.

நான் ஜாதி இந்து ஆனால் தலித் மக்களின் நிலையை பார்த்து அவர்களிடம் கழிவிரக்கம் கொண்டு அவர்களுக்கு களப்பணி ஆற்றுகிறேன் என எந்த ஜாதி இந்துவாவது சொன்னால் அது எனது சுய மரியாதைக்கு சுய கவுரவத்துக்கு எதிரானதாக நினைக்கிறேன். என் பங்கை என் உரிமையை கேட்கிறேன் உன் கழிவிரக்கம் எனக்கு தேவை இல்லை என்றே நான் அவர்களிடம் சொல்லுவேன். அது போலத்தான் எந்த பறையரேனும் நான் பறையன் நான் கழிவிரக்கம் நிறைந்தவன்  அருந்ததியர்களுக்கு உதவி செய்கிறேன் என்று சொல்லுவதும். அருந்ததிய மகளுக்கு சுய மரியாதையும் கவுரமும் உள்ளது அவர்களுக்கு உங்கள் கழிவிரக்கம் தேவை இல்லை அவர்களின் உரிமைகளை  அவர்கள் கேட்டு போராடிக்கொண்டு இருக்கிறார்கள். கழிவிரக்கம் காட்டுவதை நிறுத்தி விட்டு அவர்கள் உரிமைகளில் தலையிடும் பறையர்களை திருத்துங்கள் பறையர்களிடம் களப்பணி செய்யுங்கள் என்றே நான் சொல்லுவேன்.   புதுசா பூணூல் போட்டுட்டு  நாமம்  போட்டுட்டு  பட்டை  போட்டுட்டு  ஒரு சில பன்றிகள் நாங்க உசந்த சாதி சக்கிளியர் நமக்கு கீழன்னு மனுதர்மம் பேசுவதை மாற்றி அண்ணல் வழியில் பண்டிதர் வழியில் தம்மத்தை ஏற்க வையுங்கள். புதுசா பணம் பாத்துட்டு சூத்திர பண்ணைகள் போலவும் பார்ப்பன முதலாளிகள் போல சக்கிலிய மக்களை தங்களுக்கு அடியாட்கள் போல நடத்தும் ஒரு சில பரையர்களை மனித நேயம் மிக்க சாக்கிய  பரையர்களாக மாற்றுங்கள்.











No comments: