Tuesday, September 18, 2012

நாங்க பண்டிதர் தாத்தா தந்தை சிவராஜ்  அன்னை மீனாம்பாள் இவர்களை எல்லாம் பேசக்கூடாதாம் இவர்கள் எல்லாம் பறையர்களின் தலைவர்களாம் இவர்களை பேசினால் தலித் ஒற்றுமை கெட்டுவிடுமாம். நாங்கள் பரச்சாதி  சந்தர்ப்பவாதிகளாம் இவுங்க ராமசாமிக்கு சொம்பு  தூக்குவாங்கலாம் இவர்கள்தான் அருந்ததியர்களின் நண்பர்களாம். அடீங்கொய்யால, என் பாட்டனையும் முப்பாட்டனையும்  பேசுவதால் தலித் ஒற்றுமை கெட்டு விடும் என்றால் அப்படி பட்ட தலித் ஒறுமையே எங்களுக்கு வேண்டாம் சாமி. நாங்க ஆதி திராவிடர்களாகவும் பறையர்களாகவும் இருந்து கொள்கிறோம். தலித் ஒறுமைனா  உன்னை   நானும் என்னை நீயும் ஏற்றுக்கொள்வது. நீ மாதிகா அருந்ததியன் சக்கிலியன்னு போட்டுக்கொளும்போது நான் பெருமை பட்டுக்கொள்கிறேன். அது போல நான் பறையன் ஆதி திராவிடன் சாக்கியன்னு போட்டுக்கொள்ளும்போது நீ பெருமை பட்டுக்கொள்ள வேண்டும். எனது இந்த அடையாளம் உனக்கு எதிரானது அல்ல இது ஆதிக்க ஜாதி வெறியர்களுக்கு எதிரானது. தனது அடையாளத்தை மறைத்து தமிழன் திராவிடன் என வாழ்ந்த காலம் போய்  இன்று என் மக்கள் நெஞ்சை நிமிர்த்தி நான் பறையன் பறைச்சி நான் சாக்கியச்சி  சாக்கியன்னு சொல்லிகொள்வது சமூக எழுச்சி, அதை வரவேர்ப்பதை விடுத்து இந்த ராமசாமி கூட்டம் நமக்கு ஜாதியவாதிகள்ன்னு முத்திரை குத்துறாங்க. திராவிடம் தமிழ தேசியம்  ராமசாமியிசம் என முகமுடி போட்டுக்கொண்டு இந்த சூத்திர கூட்டம் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு இருக்கிறது. எங்கு போனாலும் அவர்கள்தான் அவர்கள்தான் நிலச்சுவான்தார்கள்   அவர்கள்தான்  தொழிலதிபர்  அவர்கள்தான்   பத்திரிக்கை முதளாளிகள்    அவர்கள்தான்  சானல்  முதளாளிகள்  சினிமா  முதளாளிகள் இவர்கள் தான் பகுத்தறிவாளர்கள் இவர்கள் தான் முற்போக்கு வாதிகள். எல்லா இடத்திலும் பார்ப்பனன் போய்  இப்போ திரவிட தமிழ்  சூத்திரவாதிகள். நமது அடையாளத்தை விட்டு விட்டு எல்லோருக்கும் நல்லவர்களா நடிச்சிட்டு இருந்தா நமது வருங்காலம் கோமணம் கூட இல்லாமல்  நடுத்தெருவில் நிக்கும். நாலு பேர் முன்னேறி நகரத்துல வந்து உக்காந்துட்டா பறையன் எல்லாம் முன்னேரிட்டான்னு சொல்லி இருக்குற உரிமையை பிடுங்க காத்து இருக்கிறது ஆதிக்க நரி கூட்டம். புரிந்தால் நமக்கு பலம்.





    

No comments: