Saturday, September 15, 2012

சென்னையில் மட்டும் நமக்கு முப்பது அஞ்சு தலைவர்கள் இருக்கிறார்கள். இது போல தமிழகம் முழுக்க ஆயரம் ஆயிரம் தலைவர்கள் உள்ளனர். இவுங்க இல்லைன்னா அம்பேத்கரியம் புத்தம் தலித்தியம் இல்லாமல் போயிருக்கும்.  நாம்ம மக்கள் எல்லோரும் டிராவிடத்துக்கும் டமில்டேசியதுக்கும் வால் பிடிக்க போயிருப்பார்கள். ராமசாமிக்கும் பிரபாகரனுக்கும் ஜால்ரா தட்டிக்கொண்டு இருப்பார்கள். அம்பேத்கர் இயக்கங்களும் தலித் இயக்கங்ககளும் வி சி கே போல பெரிய தமிழ் தேசிய கட்சியா இல்லை என்றாலும் அது இயக்கமாக மக்களின் மத்தியில் ஆலமரம் போல பறந்து விரிந்து உள்ளது. தலித் தலைவர்கள் ஈழம் வெங்காயம் டமில் டேசியம் என மக்களுக்கு சம்பந்தம் இல்லாத பிரச்சனைகளை பேசுவது இல்லை. மக்களின் வட்டார மொழிகளில் மக்களிடம் பேசி மக்களின் அன்றாட வாழ்வாதார ஜாதிய கொடுமைகளை தினம் தினம் தீர்க்க போராடிக்கொண்டு இருக்கிறார்கள். இன்று ஆதிக்க ஜாதிகளின் நிழலில் அண்டி பிழைக்கும் தி மு காவின் பினாமிகள்  நமது மக்களையும் மக்களோடு சேர்ந்து  தினம் தினம்  போராடும் தலைவர்களையும் கொச்சை படுத்தி வருகின்றனர். இந்த தலைவர்களும் அவர்களது இயக்கங்களும் போராடி பெரும் உரிமைகளுக்கு இந்த பினாமிகள்  தங்களது  பெயர்களை  போட்டு விளம்பரம் தேடிக்கொள்கின்றன. ஆதிக்க ஜாதி பண்ணைகளின் பேராதரவு இருப்பதால் ஜாதி இந்து தமிழ் பதிரிக்கைல்கள் மீடியாக்கள் எல்லாம் இந்த பினாமிக்கே முக்கியத்துவம் கொடுக்கின்றனர். 

No comments: