Sunday, September 23, 2012

இன்னைக்கு சேரிக்குள்ள என் இன சகோதர்கள் கழுத்துல மஞ்ச கயிறு, கருப்பு கயிறுன்னு போட்டுகிட்டு நெற்றியில குங்குமம் விபூதின்னு வச்சு கிட்டு ஆடு வெட்டுறது கோழி வெட்டுரது மாரியாத்தாவுக்கு கூழு ஊத்தி கும்பாபிஷேகம் செய்துட்டு இருக்காங்க. நான் அவுங்கலோடுதான் உறவாடிட்டு இருக்கேன். உங்களை போல நாத்தீகம் பேசிட்டு அறிவு ஜீவியா அவர்களோடு இருந்து என்னால் விலகி போக முடியாது. என் சமூகம் இன்னும் மாட்டு கறி சாப்பிட்டு கொண்டு தாஸ் மார்க்கில் தண்ணி அடித்துக்கொண்டு இருக்கிறது அதை கேவல படுத்தி அவர்களை ஊதாசினப்படுத்தும் அறிவற்ற மூட பதர் நான் இல்லை. அதே சமயம் என் மக்களோடு வாழ்ந்து அவர்களுக்கு அண்ணலையும் பண்டிதரையும் வள்ளுவரையும் புத்தரையும் எடுத்து சொல்லுவது  எனது பணி. என்னை பொறுத்தவரை நாத்தீகம் பேசிக்கொண்டு ஜாதியவாதியாக கொலைகாரனாக கொல்லை காரனாக முடிச்சி அவித்தியாக மொல்லை மாரியாக அடுத்தவன் பெண்களை சூறை ஆடும் அயோக்கியனாக குடிகார கூட்டமாக   மனித நேயம் அற்றவனாக இருப்பதை விட ஆத்தீகம் பேசிக்கொண்டு கழுத்தில் கருப்பு கயிறு கையில் மஞ்ச கயிறு அணிந்து கொண்டு இருப்பவர்கள் எவ்வளவோ மேல்.   

No comments: